
தொடரும் சொதப்பல்
ஆனால் அக்சர் பட்டேல் 13 ஓவரும், உமேஷ் யாதவ் 5 ஓவரும், சிராஜ் 6 ஓவர் மட்டுமே வீசியிருக்கிறார்கள்.இதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 19 ஓவர் வீசி இருக்கிறது. இதில் அஸ்வின், ஜடேஜா மட்டுமே அதிகபட்சமாக மூவர்களை வீசி இருக்கிறார்கள். இரண்டு ஓவருக்கு மட்டும் தான் உமேஷ் யாதவ் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். மற்ற மூன்று பந்துவீச்சாளர்களை ரோகித் சர்மா பயன்படுத்தவில்லை. பேட்டிங்கில் இந்தியா தற்போது சொதப்பி வருகிறது.

புரியவில்லை
இதனால் ஒரு பேட்ஸ்மேனை கூடுதலாக சேர்க்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியின் குறையை சரி செய்வதற்கு ஆஸ்திரேலியா ஜாம்பவான் இயன் சாபேல் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார். அது இந்திய அணி ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை பயன்படுத்துவதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், ஏன் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்று எனக்கு சத்தியமாக புரியவில்லை.

சேர்க்க வேண்டும்
என்னிடம் நிறைய பேர் சொல்கிறார்கள் ஹர்திக் பாண்டியாவால் டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை வீச முடியாது என்று. ஆனால் உங்களிடம் நான் கேட்பதெல்லாம் நீங்கள் மருத்துவ நிபுணர்கள் பேச்சை கேட்கிறீர்களா? இல்லை கிரிக்கெட் நிபுணர்களின் பேச்சை கேட்கிறீர்களா? ஹர்திக் பாண்டியா நான் விளையாடுகிறேன் என்று நினைத்தால் அவரை கண்டிப்பாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும். அவர் நல்ல பேட்ஸ்மேன், நல்ல பந்துவீச்சாளர், சிறந்த பில்டர் ஆஸ்திரேலிய அணி தங்களது சமநிலையை அடைய கேமரான் கிரீனை அணிக்குள் கொண்டு வந்தார்கள்.

5 ஆண்டுகள்
அதேபோல் ஹர்திக் பாண்டியாவை இந்திய அணி கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். அதன் பிறகு ஐந்து ஆண்டுகளாக அவர் சிவப்பு நிற பந்தில் விளையாடவில்லை. தற்போது தான் காயத்திலிருந்து மெல்ல மெல்ல குணமடைந்துள்ள ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடர் மூலம் தனது திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருக்கிறார்.

நல்ல யோசனை
தற்போது இந்திய அணியில் ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியா போன்ற அதிரடி வீரர் நடுவரிசையில் களமிறங்கினால் அது நிச்சயம் இந்திய அணிக்கு பலத்தை கொடுக்கும்.மேலும் வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை நீக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை குறைந்தபட்சம் ஐந்து, ஆறு ஓவருக்கு பயன்படுத்தலாம். இதனால் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பலமாக வாய்ப்பு உள்ளது. எனினும் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து இன்னும் நான் முடிவு எடுக்கவில்லை என்று ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











