பென் ஸ்டோக்ஸை, ஹர்திக் பின்பற்றினால் அவர் தலையெழுத்து மாறும்.. இயான் சாப்பல் யோசனை
Recommended Video

ஹர்திக் பண்டியாவுக்கு இயான் சாப்பல் அட்வைஸ்- வீடியோ
டெல்லி: ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் இயான் சாப்பல், தற்போது நடந்து வரும் இங்கிலாந்து - இந்தியா தொடர் குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பாக ஹர்திக் பண்டியா, தனது பேட்டிங் குறித்த நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும் எனவும், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உடைய பந்து வீச்சை பார்த்து தனது பந்துவீச்சை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து தொடர் குறித்த அவரது கருத்துக்கள் இதுதான். “இந்தியாவின் வேகப்பந்து வீச்சுடன் கூடிய ஆல் ரவுண்டர் தேடல் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. ஹர்திக் பண்டியா, கோஹ்லியுடன் முக்கிய பார்ட்னர்ஷிப்பை அளித்து தனது திறமையை காட்டினார். அவர் ஆறாவது இடத்தில் களமிறக்கப்பட்டால் அவரது பேட்டிங் நம்பிக்கை இன்னும் வலுப்பெறும். பென் ஸ்டோக்ஸ் உடைய பந்துவீச்சை பின்பற்றினால், இந்த தொடர் அவரது எதிர்காலத்தை வரையறுக்கும் தொடராக இருக்கும்”
“இங்கிலாந்து மற்றும் இந்தியா இரண்டும் ஸ்லிப் பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டது. தவறான உத்திகளாலும், வரிசையாலும் தான் இது நேர்ந்தது. இதற்கு ஒரு காரணம், இரண்டு அணிகளிலும் பீல்டர்கள் மிக அருகில் நின்று கொண்டு இருந்ததும், அதனால் ஏற்பட்ட குழப்பம் தான்”
“சாம் கர்ரன் உடைய அருமையான இடது கை ஸ்விங் பந்துவீச்சும், ஸ்டோக்ஸ் மீண்டு வந்ததும் இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்” என கூறினார் இயான் சாப்பல். மேலும், விராட் கோஹ்லி கடைசி இரண்டு பேட்ஸ்மேன்களோடு ஆடிய விதம் குறித்தும் பாராட்டியிருந்தார் சாப்பல்.
பண்டியா இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சேர்த்து ஐம்பது ரன்களுக்கு மேல் எடுத்தார். முதல் டெஸ்டில் கோஹ்லிக்கு அடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, August 7, 2018, 10:03 [IST]
Other articles published on Aug 7, 2018


Click it and Unblock the Notifications