Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீக்கனும்.. எல்லாப் போட்டிகளிலிருந்தும் நீக்கனும்.. கெய்ல் மீது சீறிப் பாயும் இயான் சேப்பல்!

சிட்னி: கிறிஸ் கெய்லை ஐபிஎல் உள்பட எந்த டுவென்டி 20 தொடரிலும் விளையாட அனுமதிக்கக் கூடாது. அவரை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் கெய்லுக்குத் தடை விதித்தால்தான் அவர் திருந்துவார் என்றும் சேப்பல் கோபமாக கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த பிக்பாஷ் டுவென்டி 20 தொடரின்போது பெண் பத்திரிகையாளரிடம் பேசிய பேச்சுக்காக கெய்ல் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகிறார்.

அபராதம்

அபராதம்

கெய்ல் அப்பெண் செய்தியாளரிடம் பேசிய பேச்சுக்காக அவருக்கு 10,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தன் மீதான எதிர்ப்பைத் தொடர்ந்து தான் சாதாரண முறையில் ஜோக் அடித்ததாகவும், அது புன்படுத்தியிருந்தால் மன்னித்து விடுமாறும் அந்தப் பெண் செய்தியாளரிடம் மன்னிப்பு கேட்டார் கெய்ல்.

பொங்கி எழுந்த சேப்பல்

பொங்கி எழுந்த சேப்பல்

இந்த நிலையில் முன்னால் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சேப்பல் பொங்கி எழுந்துள்ளார். கெய்லை பிக்பாஷ் தொடரிலிருந்து நீக்க வேண்டும். அவரை சர்வதேச அளவில் எங்குமே விளையாடக் கூடாது என்று கோபத்துடன் கூறியுள்ளார் சேப்பல்.

ஆஸ்திரேலியாவுக்கே வர விடக் கூடாது

ஆஸ்திரேலியாவுக்கே வர விடக் கூடாது

இதுகுறித்து சேப்பல் கூறுகையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா கெய்ல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் உள்ள எந்த கிளப்பிலும் அவர் சேரக் கூடாது என்று உத்தரவிட்டால் கூட நான் மகிழ்வேன்.

ஐசிசியும் தடை விதிக்க வேண்டும்

ஐசிசியும் தடை விதிக்க வேண்டும்

அதேபோல ஐசிசியிடமும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா புகார் தர வேண்டும். எந்த நாட்டு தொடரிலும் அவர் விளையாடக் கூடாது என்று தடை விதிக்க உத்தரவிட வேண்டும்.

எல்லோரும் புறக்கணிக்க வேண்டும்

எல்லோரும் புறக்கணிக்க வேண்டும்

எல்லோரும் கெய்லை புறக்கணிக்க வேண்டும். எந்த டுவென்டி 20 தொடரிலும் அவர் விளையாடக் கூடாது. ஐபிஎல் போட்டிகளுக்கும் கூட அவர் விளையாட அனுமதிக்கப்படக் கூடாது என்றார் சேப்பல்.

ஏம்ப்பா தம்பி.. நான் சரியாத்தான் பேசுறேனா...?

ஏம்ப்பா தம்பி.. நான் சரியாத்தான் பேசுறேனா...?

எல்லாம் சரிதான் சேப்பல்.. ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் மீது இதுபோன்ற புகார்கள் முன்பு வந்தபோதெல்லாம் இப்படி கோபமாகப் பேசலையே நீங்க.. "கரீபியன்" வீரர் என்பதற்காக கெய்ல் மீது ஓவராக பொங்குறீங்களோ.. இதை நாம் கேட்கவில்லை.. பலரும் கேட்கிறார்கள்.

Story first published: Friday, January 8, 2016, 13:11 [IST]
Other articles published on Jan 8, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+