Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் கிளம்பும் நேரம் வந்தாச்சு: இயான் சேப்பல்

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பலின் தம்பியும், முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனுமான இயான் சேப்பல் கூறியுள்ளார்.

சிட்னியில் அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சச்சின் டெண்டுல்கர் உலகின் மிகச் சிறந்த வீரர். குறுகிய காலத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியவர்.

ஒவ்வொரு போட்டியிலும் மிகுந்த நுட்பத்தோடு, பந்துகளைக் கணித்து ஆடுவதில் சச்சின் மிக சிறந்த வீரர். ஆனால் அவரது சமீப கால ஆட்டங்கள் இந்தியாவுக்கு எந்த வகையிலும் உதவும் வகையில் இல்லை.

அவர் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. எனவே அவர் ஓய்வு பெறுவது பற்றி சிந்திக்கலாம்.

சச்சினுக்கு அதிர்ஷ்டம் குறைவுதான். அதனால்தான் அடிக்கடி காயத்துக்கு ஆளாகிறார். இது அவரது ஆட்டதிறனை பாதித்துவிட்டது.

எந்த ஒரு சிறந்த வீரருக்கும் குறிப்பிட்ட காலத்தில் ஆட்டத் திறமை தானாக குறையும். அது இயற்கை. அதைத் தவிர்க்க முடியாது. அந்த நிலைமை இப்போது சச்சினுக்கும் ஏற்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பதை சச்சின் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+