Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs நெதர்லாந்து.. பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள்.. அஸ்வின், பிரசித், இஷானுக்கு வாய்ப்பு?

பெங்களூரு: நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை 8 போட்டிகளில் விளையாடி 8லும் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் நெதர்லாந்து அணியை பொறுத்தவரை தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது.

icc 50 over world cup India playing 11 will have 3 changes in the match against Netherlands

இந்த போட்டியில் வெற்றிபெற்றால் நெதர்லாந்து அணியின் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத தருணமாக அமையும். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரின் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் முடிக்காமல் நெதர்லாந்து அணி 8வது இடத்தில் முடிக்க வாய்ப்புகள் அமைந்துள்ளது. நெதர்லாந்து அணி இந்தியா வந்தது முதல் கர்நாடகாவில் தான் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டது. இதனால் இந்திய அணிக்கு சிறியளவிலாவது நெதர்லாந்து சவாலளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியை பொறுத்தவரை 6 நாட்களுக்கு பின் போட்டியில் களமிறங்குகிறது. இதனால் பிளேயிங் லெவனில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்ட பிரசித் கிருஷ்ணா உலகக்கோப்பை தொடரில் அறிமுகம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக சிராஜ் அல்லது பும்ரா இருவரில் ஒருவருக்கு ஓய்வு வழங்கப்படலாம்.

அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆடிய ரவிச்சந்திரன் அஸ்வின் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பெங்களூரு மைதானம் சிறியது என்பதால் இந்திய அணி அஸ்வினுடன் களமிறங்க வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. மேலும் அரையிறுதிக்கு முந்திய போட்டி என்பதால், இந்திய அணி வீரர்கள் காயமடையாமல் விளையாடினாலே போதுமானதாகும். இதனால் முக்கிய வீரரான சுப்மன் கில்லுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, அவருக்கு பதில் இஷான் கிஷன் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.

பெங்களூரு மைதானத்தை பொறுத்தவரை சேஸிங் செய்யும் அணிகளுக்கு அதிக சாதகம் இருப்பதால், இந்திய அணி டாஸ் வென்றால் சேஸிங்கையே தேர்வு செய்யும். இந்த மைதானத்தில் நட்சத்திர வீரர் விராட் கோலி 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வெறும் 25.33 சராசரியுடன் இருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தனது 50வது சதத்தை விளாச வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, November 12, 2023, 8:10 [IST]
Other articles published on Nov 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+