For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலகக்கோப்பைகான அணி.. காலக்கெடு விதித்தது ஐசிசி.. ராகுல் டிராவிட் முன் இருக்கும் சவால்கள்!

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை இறுதி செய்ய ஐசிசி காலக்கெடு அறிவித்துள்ளது.

Recommended Video

Rahul Dravid-க்கு வந்த சோதனை! India அணிக்கு மிகப்பெரிய சவால் | *Cricket

நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான ஏற்பாடுகளில் தான் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

டி20 உலகக்கோப்பை அணி

டி20 உலகக்கோப்பை அணி

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெற போகிறார்கள் என தினந்தோறும் கேள்விகள் எழுந்து வருகின்றன. அணியில் ரோகித், விராட் கோலி, பும்ரா போன்ற வீரர்களின் இடம் வழக்கம் போன்று இருக்கும். எனினும் மீதமுள்ள இடங்களுக்கு தற்போது இளம் வீரர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

காலக்கெடு விதிப்பு

காலக்கெடு விதிப்பு

இந்நிலையில் 15 பேர் கொண்ட அணியை இறுதி செய்ய காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் இறுதி செய்து அனுப்ப வேண்டும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து வாரியங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இனி வரும் போட்டிகள்

இனி வரும் போட்டிகள்

ஆனால் இந்திய அணியை இறுதி செய்ய ராகுல் டிராவிட்டிற்கு 4 போட்டிகளே உள்ளன.

அயர்லாந்து தொடர் - ஜூன் 26 - 28

இங்கிலாந்து தொடர் - ஜூலை 7 - ஜூலை 10

வெஸ்ட் இண்டீஸ் - ஜூலை 29 - ஆகஸ்ட் 2

ஆசியக் கோப்பை - ஆகஸ்ட் 27

டிராவிட்டிற்கு சிக்கல்

டிராவிட்டிற்கு சிக்கல்

இதில் அயர்லாந்து தொடரில் இளம் வீரர்களே ஆடுகின்றனர். இங்கிலாந்து தொடரில் இருந்து தான் இந்தியாவின் மொத்த பலமும் களமிறங்குகிறது. எனவே இனி வரும் 4 தொடரையும் பயன்படுத்தி வீரர்களை இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் ராகுல் டிராவிட் இருக்கிறார்.

தேர்வுக்காக திட்டம்

தேர்வுக்காக திட்டம்

இதற்காக ஒரு திட்டமும் வைத்துள்ளார். அதாவது டி20 அணிக்காக இருக்கும் வீரர்கள் இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் பெறுவார்கள். தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தால் தான் வீரர்கள் ஃபார்முக்கு திரும்புவார்கள் என டிராவிட்டிற்கு பெரும் நம்பிக்கை உள்ளது.

Story first published: Monday, June 20, 2022, 13:21 [IST]
Other articles published on Jun 20, 2022
English summary
Deadline to submit the T20 worldcup squd ( டி20 உலகக்கோப்பைகான அணியை சமர்ப்பிக்க காலக்கெடு விதிப்பு ) டி20 உலகக்கோப்பைகான அணிகளை இறுதி செய்ய ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+