டி20 உலககோப்பை தொடர் நாயகன் விருது.. ரசிகர்களே தேர்ந்தெடுக்க ஐசிசி ஏற்பாடு.. வாக்களிப்பது எப்படி?
மெல்போர்ன் : டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதை ரசிகர்களே தேர்ந்தெடுக்க ஐசிசி புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.
அதன்படி நடப்பு டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பட்டியல் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் யார் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ அந்த நபர் ஐசிசி தொடர் நாயகன் விருது வெல்வார்.
தற்போது இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்கள் யார்? எப்படி வாக்கு செலுத்துவது என்பதை தற்போது காணலாம்.

எத்தனை வீரர்கள்
ஐசிசி தொடர்நாயகன் விருதுக்கு ஐந்து நாடுகளில் இருந்து 9 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக இங்கிலாந்தில் இருந்து மூன்று வீரர்களும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து தலா இரண்டு வீரர்களும், இலங்கையில் இருந்து தலா ஒரு வீரரும் , ஜிம்பாப்வேவிலிருந்து ஒரு வீரரும் இடம் பெற்றுள்ளனர்.

வீரர்கள் பட்டியல்
இந்த பட்டியலில் நடப்பு உலக கோப்பையில் அதிக ரன்கள் சேர்த்த விராட் கோலி மற்றும் அரை சதங்கள் அடித்துள்ள சூரியகுமார் யாதவ், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய சதால் கான், பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஷாகின் ஆப்ரிடி, இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஷாம் கரண், கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் இங்கிலாந்து அணி அரை இறுதியில் வெற்றி பெற உதவிய தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹெல்ஸ்,

வாக்களிக்கும் முறை
ஜிம்பாப்வே அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய சிக்கந்தர் ராசா இலங்கை வீரர் அஸ்ரங்கா ஆகியோர் இந்த பட்டியலில் இருக்கிறார்கள்.தொடர் நாயகன் விருதுக்கு வாக்களிக்க https://www.icc-cricket.com/awards/player-of-the-tournament/ என்ற இணையதளத்தை முதலில் கிளிக் செய்ய வேண்டும். பிறகு நாம் எந்த வீரருக்கு வாக்கு செலுத்த போகிறோமோ அதை கிளிக் செய்தவுடன் நமக்கு தனி கணக்கு ஒன்றை உருவாக்க சொல்லி ஒரு புகைப்படம் தோன்றும்.

ஐசிசி இணையத்தளம்
அதில் நமது பெயர் மற்றும் ஈமெயில் ஐடியை கொடுத்து ஐசிசி இணையதளத்திற்கான கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம். அல்லது நமது முகநூல் கணக்கை பயன்படுத்தி ஐசிசி இணையதளத்தில் வாக்களிக்க நமது கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம்.ஈமெயில் மூலம் கணக்கை உருவாக்கிக் கொண்டு அதற்கான பாஸ்வேர்டை நாம் செட் செய்து கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து நமக்கு ஐசிசி இடமிருந்து மெயில் ஒன்று வந்திருக்கும். அந்த மெயிலை ஓபன் செய்தால் மட்டுமே மீண்டும் ஐசிசி பக்கத்திற்கு செல்லும்.

வெல்லப்போவது யார்-
பிறகு நாம் கொடுத்த பெயர் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை டைப் செய்து உள்ளே சென்ற பிறகு நமக்கு பிடித்த வீரர்களை கிளிக் செய்தால் நமது ஓட்டு பதிவாகிவிடும் .ரசிகர்கள் வாக்களிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளதால் இதில் விராட் கோலி வெற்றிபெற அதிக வாய்ப்பு இருக்கிறது. எனினும் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் என இரண்டு பேரும் இருப்பதால் இந்தியர்களின் ஓட்டு பிரிய வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் மற்ற வீரர்களும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. இதன் முடிவு வரும் 13ஆம் தேதி அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications