Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானில் சாம்பியனஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்.. ஐசிசி ஆச்சரிய அறிவிப்பு!

துபாய்: வரும் 2024ஆம் ஆண்டு முதல் 2031ஆம் வரை நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை, டி-20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போன்ற தொடர்களை நடத்தும் நாடுகளின் பட்டியலை ஐ.சி.சி. தற்போது வெளியிட்டுள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் டி-20 உலகக் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகளும் அமெரிக்காவும் இணைந்து நடத்த உள்ளது.

இதில் முதல் முறையாக அமெரிக்கா கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 பாகிஸ்தான்

பாகிஸ்தான்

இதே போன்று 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை தீவிரவாத அச்சுறுத்தல் நிறைந்த பாகிஸ்தானில் ஐ.சி.சி. நடத்த உள்ளது. இந்த அறிவிப்பு பாகிஸ்தானுக்கே அதிர்ச்சியாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஏனென்றால் பல அணிகள் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் ஆடாமல் ஜகா வாங்கியது வரலாறு.

இந்தியா

இந்தியா

2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டி-20 உலகக் கோப்பையை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 50 ஓவர் போட்டிகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தென்னாப்பிரிக்கா,ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

 ஆஸிக்கு வாய்ப்பு

ஆஸிக்கு வாய்ப்பு

2028ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் டி-20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இணைந்து நடத்த உள்ளன. 2029ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்த உள்ளது. 2030 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டி-20 உலகக் கோப்பையை இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன

 மீண்டும் இந்தியா

மீண்டும் இந்தியா

2031ஆம் ஆண்டு அக்டோபரில் ஐ.சி.சி. 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா,வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்துவதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்த 8 தொடரில் இந்தியா மூன்றை நடத்துகிறது. ஆனால் இந்தியா 5 தொடரை நடத்த ஐ.சி.சி.யிடம் வலியுறுத்தியது. ஆனால் இந்தியாவில் வரி விலக்கு இல்லாததால் தான் பி.சி.சி.ஐ.யின் கோரிக்கையை ஐ.சி.சி நிராகரித்துள்ளது.

Story first published: Tuesday, November 16, 2021, 20:44 [IST]
Other articles published on Nov 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+