For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கழற்றிவிடப்பட்ட கோலி, தோனி.. உலக கோப்பை ஐசிசி அணியில் ரோகித், பும்ராவுக்கு வாய்ப்பு

Recommended Video

Captain Rohit : பறிபோகும் கோலியின் பதவி?.. பிசிசிஐ முடிவிற்கு பரபரப்பு காரணம்!- வீடியோ

மும்பை: உலக கோப்பை ஐசிசி அணி பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தல தோனி ஆகியோர்களின் பெயர் இடம் பெறாதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

2019ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நிறைவு பெற்றது. பர பரப்பான தொடரின் பைனலில் கடும் போராட்டத்திற்கு இடையே நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியனானது. கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப் படுத்திய இங்கிலாந்து, முதல் முறையாக உலக கோப்பை சாம்பியனாகி வரலாறு படைத்திருக்கிறது.

Icc announced its world cup cricket team, no place for kohli and dhoni

இந் நிலையில் உலக கோப்பை போட்டிகளின் முடிவின் அடிப்படையில் ஐ.சி.சி உலக கோப்பை அணியை வெளியிட்டுள்ளது. அந்த அணியில் இந்திய வீரர்களில் ரோகித் சர்மாவும், பும்ராவும் இடம் பிடித்துள்ளனர்.

கேப்டனாக கேன் வில்லியம்சன் பெயர் இடம்பெற்றுள்ளது. அதில் கேப்டன் விராட் கோலி, தோனிக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. இந்தியாவின் சார்பில் அந்த அணியில் ரோகித் சர்மா, பும்ரா ஆகிய 2 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

ஐசிசி அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்: ரோகித் சர்மா ( இந்தியா), ஜேசன் ராய் ( இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் ( நியூசிலாந்து), ஷகிப் அல் ஹசன் (வங்க தேசம்), ஜோ ரூட் ( இங்கிலாந்து), பென் ஸ்டோக்ஸ் ( இங்கிலாந்து), அலெக்ஸ் கேரி ( ஆஸ்திரேலியா), மிர்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து), பெர்குசன் (நியூசிலாந்து), ஜஸ்பிரித் பும்ரா(இந்தியா).

ஐசிசி உலக கோப்பை அணியில் 12-வது வீரராக போல்ட் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Story first published: Tuesday, July 16, 2019, 15:49 [IST]
Other articles published on Jul 16, 2019
English summary
Icc announced its world cup cricket team, no place for kohli and dhoni.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+