Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2019ன் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் கேப்டன் விராட் கோலி

Recommended Video

2019-ன் சிறந்த கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா... விருது வழங்கிய ஐசிசி

2019ம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விருதுகள் மற்றும் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் கேப்டனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

மேலும் இந்த அணிகளில் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகிய வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விருதுகள் 2019 அறிவிப்பு

விருதுகள் 2019 அறிவிப்பு

ஆண்கள் கிரிக்கெட் 2019க்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருது பெற்ற கோலி

விருது பெற்ற கோலி

கடந்த 2018ல் வீரர்களின் செயல்திறனை கணக்கிட்டு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதினை கேப்டன் விராட் கோலி தட்டி சென்றுள்ளார்.

விராட் கோலி கேப்டனாக அறிவிப்பு

விராட் கோலி கேப்டனாக அறிவிப்பு

ஐசிசியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான 2019 அணியும் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி இரண்டு அணிகளுக்கும் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

4 வீரர்கள் இடம்பிடிப்பு

4 வீரர்கள் இடம்பிடிப்பு

ஐசிசியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் கேப்டன் விராட் கோலி தேர்வாகியுள்ள நிலையில் மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, முகமது ஷமி ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். இதேபோல டெஸ்ட் போட்டிக்கான அணியில் குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான வரிசை

ஒருநாள் போட்டிக்கான வரிசை

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான அணியில் துவக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், சாய் ஹோப், கேப்டன் விராட் கோலி, பாபர் அசாம், கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், மிச்செல் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டிக்கான வரிசை

டெஸ்ட் போட்டிக்கான வரிசை

ஐசிசி டெஸ்ட் போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் மயங்க் அகர்வால், டாம் லாதம், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், விக்கெட் கீப்பர் பி.ஜே. வாட்லிங், பாட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், நீல் வாக்னர், நாதன் லியோன் இடம்பிடித்துள்ளனர்.

விராட் கோலி, ஸ்டோக்ஸ், மிச்செல்

விராட் கோலி, ஸ்டோக்ஸ், மிச்செல்

இந்த இரு அணிகளிலும் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரு அணிகளிலும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மிச்செல் ஸ்டார்க் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Story first published: Thursday, January 16, 2020, 11:10 [IST]
Other articles published on Jan 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+