Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வம்சாவளி அமெரிக்க வீரருக்கு 8 ஆண்டுகள் தடை.. ஸ்பாட் பிக்சிங் புகாரில் ஐசிசி அதிரடி

வாசிங்டன்: 2025 ஆம் ஆண்டு அபுதாபி டி10 தொடரில் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காக, இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க கிரிக்கெட் வீரர் போடுகம் அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி எட்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. ஐசிசியின் ஊழல் தடுப்பு விதிகளின் மூன்று பிரிவுகளை அவர் மீறியதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அகிலேஷ் ரெட்டியின் மேஜர் லீக் கிரிக்கெட் அணியான வாஷிங்டன் ஃப்ரீடம் வழங்கிய தகவலின்படி, இந்தியாவில் ஹைதராபாத்தில் வளர்ந்த இவர், விஜய் ஹசாரே கோப்பைக்கான அணியில் இடம்பெற்றதுடன், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகவும் செயல்பட்டுள்ளார்.

Bodugum Akhilesh Reddy

வலது கை பேட்டரான இவர், சிறந்த ஆஃப்-ஸ்பின்னரும் ஆவார். அமெரிக்க அணிக்காக நான்கு சர்வதேச போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அவரது கடைசி டி20 சர்வதேச போட்டி 2025 இல் கனடாவுக்கு எதிராக அமைந்தது.

ஆர்ஸ்தீப் சிங், சம்ரீன் கவுர் காதல்? இண்ஸ்டாவில் இருவரும் சேர்ந்து ரொமன்ஸ்

ஆர்ஸ்தீப் சிங், சம்ரீன் கவுர் காதல்? இண்ஸ்டாவில் இருவரும் சேர்ந்து ரொமன்ஸ்

தற்பொழுது 26 வயதாகும் இவருக்கு எதிரான புகார்கள் அனைத்தும், 2025 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற அபுதாபி டி10 தொடரைச் சார்ந்தவை ஆகும். ஐசிசி ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் அவர் மீதான பின்வரும் மூன்று விதிமீறல்களை உறுதி செய்துள்ளது:

அகிலேஷ் ரெட்டி தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட 2025 நவம்பர் 21 முதல் இந்த 8 ஆண்டு தடை அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, 2033 நவம்பர் 21 வரை எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் அல்லது கிரிக்கெட் தொடர்பான செயல்பாடுகளிலும் அவரால் பங்கேற்க முடியாது. அப்போது அவருக்கு 34 வயது கடந்திருக்கும்.

விசாரணையின்படி, 2025 நவம்பர் 19 அன்று காலை, அஸ்பின் ஸ்டாலியன்ஸ் அணியின் முதல் அபுதாபி டி10 போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அணி தங்கியிருந்த ஹோட்டலில் இந்த முறைகேடான அணுகுமுறை நடந்துள்ளது.

சக வீரர் ஒருவர் அளித்த சாட்சியத்தை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது. அந்த வீரரை Player A என்று ஐசிசி குறிப்பிட்டுள்ளது. பந்துவீசும்போது வேண்டுமென்றே ரன்களை வழங்குமாறு அகிலேஷ் ரெட்டி தன்னிடம் கேட்டதாகவும், இந்த கோரிக்கை அணியின் நிர்வாகத்தில் உள்ள மற்றொரு நபரிடமிருந்து வந்ததாக அகிலேஷ் கூறியதாகவும் அந்த வீரர் தெரிவித்தார். இந்த கோரிக்கையை உடனடியாக நிராகரித்த அந்த வீரர், தனது ஏஜெண்டுக்கு தகவல் தெரிவித்து, 30 நிமிடங்களுக்குள் ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகார் அளிக்கப்பட்ட 30 நிமிடங்களுக்குள், அன்றைய போட்டிப் பட்டியலில் இருந்து வீரர் ஏ நீக்கப்பட்டதையும் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது. தான் கூறியபடி செயல்பட அந்த வீரர் மறுத்துவிட்டார் என்பதை அகிலேஷ் ரெட்டி அணி நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளார் என்பதை இந்த நிகழ்வுகள் காட்டுவதாக தீர்ப்பாயம் கருதியுள்ளது.

பும்ரா காயம், கடவுளே தந்த வாய்ப்பு.. 29 வயது வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

Also Read

பும்ரா காயம், கடவுளே தந்த வாய்ப்பு.. 29 வயது வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

மேலும், தனது மொபைல் போனை ஐசிசியிடம் ஒப்படைப்பதற்கு முன்பு, 'வீரர் ஏ' உடனான வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் அழைப்புப் பதிவுகளை அகிலேஷ் ரெட்டி திட்டமிட்டு அழித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

Story first published: Monday, August 3, 2026, 16:04 [IST]
Other articles published on Aug 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+