Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை மட்டும் மனதில் வைத்து செயல்பட கூடாது.. ஐசிசி தலைவரான ஜெய்ஷாவுக்கு முன்னாள் தலைவர் அட்வைஸ்

மும்பை : சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய்ஷா இந்தியாவை மட்டும் மனதில் வைத்து செயல்படக்கூடாது என பதவியை விட்டு விலகிய கிரேக் பார்க்க்லே அறிவுரை வழங்கி இருக்கிறார். ஐசிசி யின் தலைவராக ஜெயிஷா கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி பதவி ஏற்றார்.

இந்த நிலையில் ஜெய்ஷாவுக்கு வாழ்த்து கூறியுள்ள பதவி விட்டு சென்ற கிரேக் பார்க்கலே, கிரிக்கெட்டை ஒட்டுமொத்தமாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஜெய்ஷாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். எனினும் இந்தியாவை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு செயல்படாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் ஜெய்ஷா மனதில் வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

jay shah icc chairman greg barclay bcci india cricket

இது குறித்து பேசிய அவர், இந்தியா போன்ற ஒரு நாடு கிடைத்திருக்கிறது நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும். கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பங்கை இந்தியா ஆற்றுகிறது. எனினும் ஒரு நாடு மட்டும் இவ்வளவு பலமாக , செல்வாக்காக இருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் நன்மைக்கும் பங்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.

மேலும் இந்தியா கிரிக்கெட்டில் சக்தி வாய்ந்த நாடாக இருப்பதால்,உலக கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கும் இல்லை. ஆனால் இந்தியா நினைத்தால் மற்ற உறுப்பினர் நாடுகளை ஒருங்கிணைத்து கிரிக்கெட்டை மேலும் வளர்க்க முடியும். இந்தியா விளையாடுவது மூலம் கிடைக்கும் வருமானத்தை அவர்கள் மற்ற நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்க முடியும்.

சிறிய சிறிய நாடுகளுக்கு தங்களது அணியை அனுப்பி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வைத்து அவர்களுக்கு உதவ முடியும். இதன் மூலம் புதிய புதிய நாடுகள் மற்றும் வர்த்தகத்தை கிரிக்கெட் பிடிக்க ஐசிசியுடன் இந்தியா இணைந்து செயல்பட்டு மற்ற உறுப்பினர்களுக்கு பலன் கொடுக்க முடியும். நான் ஐசிசி தலைவராக இருந்த போது தற்போது எந்த நாடு எந்த நாட்டுக்கு எதிராக விளையாடுகிறது என்று கூட என்னால் சொல்ல முடியாது.

இன்னும் சொல்லப்போனால் தென் ஆப்பிரிக்கா வீரர் மார்க்கோ ஜான்சன் 7 விக்கெட் எடுத்த போது தான் தென்னாப்பிரிக்காவுக்கு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது என்று எனக்கு தெரியும். எனவே இது கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம் கிடையாது. நாம் நமது கண்ணோட்டத்தை இழந்து விட்டோம்.
தற்போது அட்டவணை ஒரு குப்பை போல் தொடர்களால் நிறைந்து இருக்கிறது.

இதனை சரி செய்ய வேண்டும். ஆனால் இதற்கு பலரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆப்கானிஸ்தான் தங்களது மகளிர் அணியை விளையாட அனுமதிப்பதில்லை. இதற்காக ஆப்கானிஸ்தானை கிரிக்கெட்டில் இருந்து தடை விதிக்கலாம். ஆனால் இது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்த தவறு கிடையாது. தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு இதுபோல் செயல்படுவதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்.

தங்களது அரசியல் கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி இரு தரப்பு தொடரை சில நாடுகள் ரத்து செய்கிறது. நீங்கள் உண்மையில் உங்களுடைய அரசியல் கொள்கையில் உறுதியாக இருந்தால், உலகக்கோப்பை தொடரில் அவர்களுடன் விளையாடாமல் புறக்கணியுங்கள். ஆனால் அங்கே யாரும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இப்படி செய்வதன் மூலம் அரையிறுதி வாய்ப்பு பறிபோகும் என்று கிரேக் பார்க்கலே கூறியுள்ளார்.

Story first published: Thursday, December 5, 2024, 10:33 [IST]
Other articles published on Dec 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+