Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தலைவர் பதவிக்காலம் முடிந்தது.. விடை பெறும் ஷஷான்க் மனோகர்.. அடுத்த தலைவர் கங்குலி?

துபாய் : பதவிக் காலம் முடிவடைந்து ஐசிசி தலைவர் பொறுப்பில் இருந்து ஷஷான்க் மனோகர் விடை பெற்றார்.

Recommended Video

Ganguly on ICC Chairman race, Shashank Manohar steps down

இவர் முன்னாள் பிசிசிஐ தலைவராகவும் இருந்தவர். இரண்டு முறை ஐசிசி தலைவர் பொறுப்பில் தொடர்ந்து இருந்தார்.

அடுத்த ஐசிசி தலைவரை தேர்வு செய்ய விரைவில் தேர்தல் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குடைச்சல்

குடைச்சல்

கடந்த நான்கு ஆண்டுகளாக ஐசிசி தலைவராக இருந்த அவர் பிசிசிஐக்கு குடைச்சல் கொடுத்ததாக புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐயில் இருக்கும் சில லாபிக்கு எதிராக அவர் செயல்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

விமர்சனம்

விமர்சனம்

சமீபத்தில் 2௦20 டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கும் முடிவை அறிவிக்காமல் ஐசிசி காலம் தாழ்த்தி வருவதற்கும் அவர் தான் காரணம் என பிசிசிஐ அதிகாரிகள் குற்றம் சாட்டி இருந்தனர். 2020 ஐபிஎல் தொடரை நடத்த விடாமல் செய்யவே அவர் இவ்வாறு செய்ததாக கூறினர்.

நிறைவு

நிறைவு

இந்த நிலையில், அவர் பதவிக் காலம் முடிந்து ஐசிசியில் இருந்து வெளியேறுகிறார். அடுத்த ஐசிசி தலைவரை தேர்வு செய்யும் பணி விரைவில் துவங்க உள்ளது. அது வரை துணைத் தலைவர் இம்ரான் கவாஜா தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.

கங்குலி

கங்குலி

அடுத்த ஐசிசி தலைவருக்கான போட்டியில் பிசிசிஐ தலைவர் கங்குலியின் பெயரும் அடிபடுகிறது. கங்குலி சில மாதம் முன்பு ஐசிசி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அத்னால், அவரை பிசிசிஐ தலைவர் பதவிக்கு நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல்

தேர்தல்

கங்குலி தலைவர் பதவிக்கான தேர்தலில் நின்றால் பல பெரிய உறுப்பு நாடுகள் அவரை ஆதரிக்கும் என கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய நாடுகள் நிச்சயம் கங்குலியை ஆதரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Wednesday, July 1, 2020, 19:23 [IST]
Other articles published on Jul 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+