Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி.. விட்டு விட்டு பெய்த மழை.. ஆஸி.- நியூசிலாந்து இடையேயான போட்டி கைவிடப்பட்டது

பர்மிங்காம்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழை குறுக்கீட்டால் பாதியிலேயே கைவிடப்பட்டது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

 ICC Champions Trophy 2017: Australia Vs New Zealand: Hatke moments of the match

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. மழை காரணமாக போட்டி தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. இதனால் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து தொடக்க வீரர்களாக குப்தில், ரோஞ்சி களமிறங்கினர். 6-வது ஓவரின் போது 40 ரன்களை சேர்த்திருந்த நிலையில், 26 ரன்களை குவித்திருந்த குப்தில் ஹாசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ரோஞ்சியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் அதிரடி காட்டினார். அவர் 65 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஞ்ச் ஹேஸ்டிங் பந்துவீச்சில் அவுட்டானார். இதனிடையே சதம் விளாசிய வில்லியம்சன் ரன் அவுட் முறையில் அவுடாகி வெளியேறினார்.

டெய்லர் 46 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹாசில்வுட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களையே சேர்த்தனர். இறுதியில் 45 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்களை எடுத்தது.

மீண்டும் மழை குறுக்கிட்டதால், ஆஸ்திரேலியாவின் பேட்டிங் தொடங்க தாமதமானது. மேலும், அந்த அணிக்கு 33 ஓவர்களில் 235 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை விரட்டிய அந்த அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்திருந்தபோது, மூன்றாவது முறையாக மழை குறுக்கிட்டது. இந்த முறை கனமழை கொட்டி மைதானம் முழக்கியதால், ஆட்டத்தை மீண்டும் தொடங்க வாய்ப்பே இல்லாமல் போனது. இதனால், ஆட்டம் முடிவு இல்லாமல் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Story first published: Saturday, June 3, 2017, 2:20 [IST]
Other articles published on Jun 3, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+