பாக். பிழைச்சது இருக்கட்டும்.. டிவில்லியர்ஸுக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா!
பிர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நேற்று பாகிஸ்தான் தப்பிப் பிழைத்து விட்டது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 19
ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. ஆனால் ரிசல்ட் கிடைத்து விட்டது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 27 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டது. இருப்பினும் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 19 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை விட்டே விரட்டப்படும் அபாயத்திலிருந்து பாகிஸ்தான் தப்பியுள்ளது. இந்தப் போட்டியின் ஹைலைட்ஸைப் பார்க்கலாம்.

முதல் முட்டை
ஏபி டிவில்லியர்ஸுக்கு இந்தப் போட்டி பெரும் தர்மசங்கடத்தைக் கொடுத்து விட்டது. ஆனால் அவர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இது அவரது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையில் கிடைத்த முதல் டக் அவுட் ஆகும்.

அதிரடி நாயகனின் சோகம்
டிவில்லியர்ஸின் அதிரடியை மட்டுமே இதுவரை பார்த்து ரசிதத் கிரிக்கெட் ரசிகர்கள் அவர் டக் அவுட் ஆனதையே ஜீரணிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பாகிஸ்தான் அபாரம்
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் நேற்றைய போட்டியில் அசத்தினர். நேற்று முதல் 15 ஓவர்களில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் 3 விக்கெட் மேல் வீழ்த்தினர். இதுபோல நடப்பது 2001ம் ஆண்டுக்குப் பிறகு இதுவ 2வது முறையாகும்.

சற்றே கலக்கிய காகிசோ
தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் எல்லோருமே மெதுவாக ஆடி வந்தபோது 23 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து சற்றே வேகம் காட்டினார் காகிஸோ ரபதா. இவர் மட்டுமதான் நேற்றைய போட்டியில் 100 ரன்ரேட்டை வைத்திருந்த ஒரே வீரர்.


Click it and Unblock the Notifications