Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மினி உலக கோப்பை: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு! களத்துக்கு வரும் யுவி, மனிஷ், ரோஹித் சர்மா!

டெல்லி: மினி உலக கோப்பைக்கான 15 பேர் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பெயர் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அனுபவமிக்க வீரர்களும் புதியவர்களை கலந்த அணியாக திகழ்கிறது தற்போதைய அணி.

டாப்- 8 கிரிக்கெட் அணிகள் மட்டுமே பங்கேற்கும் மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன.

ஏ- பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காள தேச அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்தப் போட்டியில் இந்திய அணி பங்கேற்பது உறுதியாகி விட்ட நிலையில், அணித்தேர்வு இன்று நடைபெற்றது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரத்தை வெளியிட்டனர்.

 யார் யார்?

யார் யார்?

கோஹ்லி, டோணி, தவான், ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், மனிஷ் பாண்டே, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகம்மது சமி, ஹெதார், ரஹானே, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 மீண்டும் வந்தார் யுவராஜ் சிங்

மீண்டும் வந்தார் யுவராஜ் சிங்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் யுவராஜ் சிங் இந்திய அணிக்குள் வந்துள்ளார். இவர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி சார்பாகப் பங்கேற்று அதிரடியாக விளையாடி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதையடுத்து யுவராஜ் சிங் மினி உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

 இடம்பிடித்த மனிஷ் பாண்டே

இடம்பிடித்த மனிஷ் பாண்டே

இதே போன்று மனிஷ் பாண்டேவும் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. மனிஷ் பாண்டே பேட்டிங் ஸ்டைல் ஆட்டத்தை ரசிகர்கள் மீண்டும் கண்டுகளிக்க நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது ஐசிசி.

 களத்தில் இறங்கும் ரோஹித் சர்மா

களத்தில் இறங்கும் ரோஹித் சர்மா

காயம் காரணமாக கடந்த 4 மாதங்களாக ஓய்வில் இருந்தார் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா. தற்போது ஐபிஎல் போட்டிகளில் திறம்பட விளையாடுகிறார். அவருக்கும் மினி உலக கோப்பைக்கான இந்திய அணி இடம் அளிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, May 8, 2017, 14:29 [IST]
Other articles published on May 8, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+