Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் கோப்பை- ஐசிசி பக்கம் திரும்பிய கத்தி! இந்தியா Vs பாக் போட்டி இல்லை என்றால் அவ்வளவு தான்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான முகமது சமி கடந்த ஒரு ஆண்டாக எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது அவர் முழு உடல் பகுதியை பெற்று ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஒரு டெஸ்டில் ஏழு விக்கெட் வீழ்த்தினார்.

இதன் மூலம் முஹமது ஷமி, உடல் தகுதியை நிரூபித்துள்ள நிலையில் அவரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்று பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட வைக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் முகமது சமி அடுத்து நடைபெறும் சையது முஸ்தாக் டி20 தொடரில் விளையாட போகிறார்.

champions trophy bcci india cricket team pakistan 2025

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆன மோர்னே மோர்க்கல் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், முகமது சமியின் உடல் தகுதியை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

சமி ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். சமியை ஏன் அணிக்கு கொண்டு வரவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். இதில் ஒரு விஷயத்தை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆண்டாக எந்த ஊரில் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கின்றார். இந்த சூழலில் அவரையும் அவருடைய உடல் நலத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஷமி தற்போது ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் திரும்பியதே, எங்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக இருக்கின்றது. அதுவும் ஒரு ஆண்டுக்குப் பிறகு திரும்பிய ஆட்டத்தில்,ஏழு விக்கெட்டுகளை அவர் விழித்திருக்கிறார். தற்போது சமிக்கு நாங்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும். அவரை அணிக்கு திரும்பி அழைத்து வருவதற்கான சிறந்த வாய்ப்பை நாங்கள் அவருக்கு வழங்க வேண்டும்.

எனினும் நாங்கள் சமியை அவசரப்படுத்த விரும்பவில்லை. சமி விஷயத்தில் நாங்கள் பொறுமையாகவே முடிவெடுக்க விரும்புகின்றோம். அவர் தற்போது தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட தொடங்கி இருக்கின்றார். டெஸ்ட் டி20 என எந்த வித போட்டியாக இருந்தாலும், அவர் அதில் பங்கேற்று எவ்வாறு செயல்படுகிறார் என்பதை இன்னும் கவனிக்க வேண்டியது இருக்கின்றது. அதில் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பார்த்து தான் அணியில் தேர்வு செய்வது குறித்து யோசிக்க முடியும் என்று மோர்னே மார்க்கல் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, November 20, 2024, 20:27 [IST]
Other articles published on Nov 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+