சாம்பியன்ஸ் டிராபி- அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் செல்ல முடியுமா? தென்னாப்பிரிக்கா தோற்றால் போதுமா?
லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி இன்று உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் அட்டல் மற்றும் உமர்சாய் ஆகியோர் அபாரமாக விளையாட ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 273 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி 12.5 ஓவர்கள் எல்லாம் ஒரு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களை எடுத்தது இந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்ட நிலையில் போட்டியை தொடர முடியாது நிலை ஏற்பட்டதால் ஆட்டம் வெற்றி தோல்வி என்று முடிவு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் இது அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த சூழலில் தற்போது ஆப்கானிஸ்தான் அணி 3 புள்ளிகளுடன் நிறைவு செய்திருக்கிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணியும் மூன்று புள்ளிகளுடன் தான் உள்ளது.
தற்போது அவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை பலப்பரிட்சை நடத்துகின்றனர். இதில் இங்கிலாந்து அணி 207 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களுடைய ரன் ரேட் ஆப்கானிஸ்தானுக்கு கீழ் செல்லும். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். ஆனால் 207 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்க வாய்ப்பே இல்லை.
இதேபோன்று தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தால், அவர்கள் அதிகபட்சமாக 125 ரன்கள் தான் எடுக்க வேண்டும். அதனை இங்கிலாந்து அணி 11.5 ஓவர்களில் எட்ட வேண்டும். ஒருவேளை தென்னாபிரிக்கா 75 ரன்கள் ஆட்டம் இழந்தால் அதனை இங்கிலாந்து எட்டு ஓவரிலும், ஒருவேளை தென்னாபிரிக்கா 100 ரன்களில் ஆட்டம் இழந்தால் அதனை பத்து ஓவரிலும் அந்த அணி சேஸ் செய்ய வேண்டும்.
இது நடந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு செல்ல முடியும். இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஒருவேளை நாளை ஆட்டமும் மழையால் ரத்தானால் தென்னாபிரிக்க அணி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெறும்.


Click it and Unblock the Notifications