Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டிங்கில் கலக்கிய இந்திய வீரர்கள்... இந்தியா vs இலங்கை போட்டி துளிகள்

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற 8வது போட்டி, குரூப் 'பி'யில் இடம்பெற்றுள்ள இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் இலங்கை டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்தது.

* தவான் மற்றும் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிராக தொடர்ந்து 3 முறை 100 ரன்களை எடுத்த தொடக்க ஆட்டக்கார்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

 ICC Champions Trophy: Match 8: Highlights: India Vs Sri Lanka; Dhawan on a record breaking spree

* இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறும் 150வது கிரிக்கெட் போட்டி இதுவாகும். சர்வதேச அளவில் எந்த அணிகளும் இவ்வளவு போட்டிகள் ஆடியதில்லை. பாகிஸ்தானும், இலங்கையும் 147 போட்டிகளில் விளையாடியதே, 2வது அதிகபட்சமாகும்.

* ரோகித் சர்மா முதல் ஓவரை வீசிய லசித் மலிங்கா பந்தில் பவுண்டரி அடித்து, ரன் கணக்கை தொடங்கினார்.

* இதேபோன்று, ஷிகர் தவானும், பவுண்டரி அடித்தே, தனது ரன் கணக்கை தொடங்கினார்.

* முதல் பவர்பிளே நேரத்தில் இந்திய அணி 48 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்தது.

* சாம்பியன்ஸ் டிராபி தொடரில், ரோகித் மற்றும் தவான் ஆகியோர் மட்டுமே 2 முறை 100 ரன்களை எடுத்த தொடக்க ஜோடிகள் ஆவர்.

* ரோகித் சர்மா ,60 பந்துகளில், 31வது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

* ஷிகர் தவான், தனது 19வது அரை சதத்தை பவுண்டரி அடித்து, பூர்த்தி செய்தார்.

* இந்திய அணி 138 ரன்களை எடுத்தபோது, ரோகித் சர்மா 78 ரன்களை சேர்த்து, ஆட்டமிழந்தார்.

* இந்திய கேப்டன் விராட் கோஹ்லி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தார்.

* யுவராஜ் சிங் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

* ஷிகர் தவான், தனது 10வது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை பூர்த்தி செய்தார். மேலும், குறைந்த போட்டிகளில் 10 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

* தவான் 125 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த டோணி அவரது 62வது ஒருநாள் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

* டோணி 63 ரன்களை எடுத்த நிலையில், 50வது ஓவரில் ஆட்டமிழக்க, இந்திய அணியின் ரன் குவிப்பு 321 ரன்களுடன் முடிவடைந்தது.

Story first published: Thursday, June 8, 2017, 20:27 [IST]
Other articles published on Jun 8, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+