என்னா அடி.. பிரஷர் பறந்து போய்ருச்சு... மெய் சிலிர்க்கும் கோஹ்லி!
பிர்மிங்காம்: யுவராஜ் சிங் அடித்த அடியைப் பார்த்தபோது, அவரது அதிரடியைப் பார்த்தபோது, அவருக்கு முன்பு நான் கிளப் போட்டியில் விளையாடும் வீரர் போல மாறி விட்டேன் என்று கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பாகிஸ்தானுடனான சாம்பியன்ஸ் டிராபி போட்டி நேற்று தொடர் மழைக்கு மத்தியில் விட்டு விட்டு நடந்து முடிந்தது. போட்டியை இந்தியா படு ஸ்டைலாக தன் வசப்படுத்தியது.
நேற்றைய வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 2 முறை வென்று வெற்றி சதவீதத்தை 2-2 என்று சமன்படுத்தி விட்டது இந்தியா. இப்போட்டியில் யுவராஜ், ஷிகர் தவான், விராத் கோஹ்லி ஆகியோர் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பி விட்டனர். யுவராஜ் குறித்து கேப்டன் கோஹ்லியும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

எனக்கு பிரஷர்
நான் சரியாக ரன் எடுக்க திணறியபோது யுவராஜ் அந்த டென்ஷனை தூக்கி விட்டார். அவர் பேட் செய்ததைப் பார்த்தபோது, பந்துகளைக் கையாண்ட விதத்தைப் பார்த்தபோது, அவருக்கு முன்பு நான் ஒரு கிளப் பேட்ஸ்மேன் மாதிரியே தெரிந்தேன்.

எல்லோருமே சூப்பர்
பேட்ஸ்மேன் அனைவருமே நல்ல ரன்கள் எடுத்தது மகிழ்ச்சி. ஷிகர் - ரோஹித் சர்மா அருமையான தொடக்கம் தந்தனர். காயத்திலிருந்து மீண்டு வந்து ஆடுகிறார் ரோஹித் சர்மா.

ஹர்டிக் பிரமாதம்யா
ஹர்டிக் பிரமாதமாக ஆடினார். 5 பந்துகளில் 18 ரன்கள் அருமையானது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியதால் நான்கு வேகப் பந்து வீச்சாளர்களுடன் நாங்கள் ஆடினோம். அவர்கள், ஸ்பின் நன்றாக விளையாடுவார்கள். பெரும்பாலான வீரர்கள் வலது ஆட்டக்காரர்கள். எனவேதான் அதற்கேற்ப திட்டமிட்டு ஆட்களை போட்டோம் என்றார் கோஹ்லி.

ஏமாற்றத்தில் சர்பிராஸ் அகமது
பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது போட்டி முடிவு குறித்து பெரும் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், 40 ஓவர்களுக்குப் பிறகு நாங்கள் சொதப்பி விட்டோம். இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்தது எங்களுக்கு சிக்கலாகி விட்டது. பந்து வீச்சில் நாங்கள் இன்னும் கட்டுப்பாட்டோடு இருந்திருக்க வேண்டும். கடைசி ஓவர்களில் நாங்கள் கூடுதல் ரன்களைக கொடுத்து விட்டோம் என்றார்.


Click it and Unblock the Notifications