Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுண்டரி லைன் கேட்ச் விதி- ஐசிசி அதிரடி மாற்றம்.. இனி எல்லைக்கோட்டில் சாசகம் எல்லாம் செய்ய முடியாது

லண்டன்: கிரிக்கெட் தற்போது மாறி வருகிறது. பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்கள் மழை பொழிந்து வருகின்றனர். இப்படி சிக்சர் அடிக்கும் போதெல்லாம் அதனைத் தடுக்கவும் வீரர்கள் பல சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிக்ஸர்களை தடுப்பதற்கு பல முயற்சிகளை பவுண்டரி லைனில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் முக்கியமானது ஒன்று Bunny hop என கேட்ச் வகை. அதாவது பந்தை பிடிக்க முயலும் போது அது சிக்ஸர் லைனை நாம் தாண்டி சென்று விடுவோம் என வீரர்கள் நினைத்து பந்தை களத்திற்குள் தூக்கி எறிந்து விடுவார்கள். அப்போது மீண்டும் களத்திற்குள் வந்து கேட்சை பிடிப்பார்கள்.

ICC Catch rules

இந்த முறையில் தற்போது அதிக அளவு கேட்ச்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. இது கிரிக்கெட்டுக்கு புதிய திருப்புமுனையாகவே அமைந்துள்ளது. ஆனால் இதில் சில தவறுகளும் நிகழ்வதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர். அதாவது, இந்த மாதிரி கேட்சை பிடிக்கும் வீரர்கள் ஒரே கேட்சை பிடிப்பதற்காக பலமுறை பவுண்டரி லைனுக்கு வெளியே சென்று விட்டு பந்தை களத்திற்குள் தூக்கி எறிந்து மீண்டும் கேட்ச் பிடிப்பதாக கூறப்பட்டது.

இப்படித்தான் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பிபிஎல் தொடரில் சில்க் என்ற வீரர் அடித்த பந்தை பிடித்த வீரர் மைக்கேல் நேசர் களத்திற்கு வெளியே இரண்டு முறை சென்று பந்தை தூக்கி எறிந்து கேச்சை நிறைவு செய்தார். தற்போது இந்த புதிய விதியின் மூலம் இந்த வகையான கேட்ச் தடை விதிக்கப்படுகிறது. தற்போது புதிய விதிப்படி கேட்சை பிடிக்கும் வீரர் எல்லைக்கோட்டை ஒருமுறை மட்டுமே தாண்டி பந்தை தூக்கி எறிய முடியும்.

ஒரே கேட்சில் இரண்டாவது முறையும் இதே செய்தால் அது சிக்ஸராக அறிவிக்கப்படும். அதாவது ஒருமுறை மட்டுமே பவுண்டரி லைனைத் தாண்டி அந்தரத்தில் பந்தை பிடித்து மைதானத்திற்கு உள்ளே தூக்கிப் போட வேண்டும். அதே கேட்சில், இரண்டாவது முறையாக மைதானத்திற்கு வெளியே சென்று விட்டால் அது சிக்ஸராக கருதப்படும். இதே போன்று முதல் வீரர் தூக்கி போடும் பந்தை, 2வது வீரர் களத்திற்குள் பிடிக்கும் போது, பந்தை எறிந்த முதல் வீரர் மைதானத்திற்குள் வந்துவிட வேண்டும். இந்த புதிய வரும் 17ஆம் தேதி மூலம் அமலுக்கு வருகிறது.

Story first published: Saturday, June 14, 2025, 10:09 [IST]
Other articles published on Jun 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+