Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டிலும் வந்தது 'ரெட் கார்டு'.. அதிரடி விதிமுறைகளை அறிவித்தது ஐசிசி

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), கிரிக்கெட் விளையாட்டில் சில விதிமுறைகளை மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில் ஒரு முக்கியமான விதிமுறை மாற்றம் என்பது, பெரிய தவறுகளில் ஈடுபடும் வீரர்களை மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேற்ற முடியும் என்பதாகும். கால்பந்தாட்டங்களில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றும் நடைமுறையை போன்றது இது.

மேலும் ஃபீல்டிங், ரன்அவுட் விஷயங்களிலும் பல விதிமுறை மாற்றங்களை கொண்டுவந்துள்ளது, ஐசிசி. அதுகுறித்த விவரம் இதுதான்:

வீரர்கள் வெளியேற்றம்

வீரர்கள் வெளியேற்றம்

ஐசிசி விதிமுறைப்படி, லெவல்-4 வகை குற்றங்களான நடுவரை தாக்குவது, மிரட்டுவது, வேண்டுமென்றே இடிப்பது, சக வீரர்களுடன் உடல் அளவில் மோதலில் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபடும் வீரர்கள் உடனடியாக மைதானத்தை விட்டே வெளியே அனுப்பப்படுவார்கள்.

பேட் அளவு

பேட் அளவு

பேட்டின் நீள, அகலங்களில் ஐசிசி எந்த மாற்றமும் செய்யவில்லை என்றபோதிலும், பேட்டின் ஓரங்கள் (எட்ஜ்) 40 மி.மீக்கு மிகாமல் இருக்க வேண்டும். டெப்த் 67 மி.மீக்கு மிகாமல் இருக்க வேண்டும். பேட்டை அளவீடு செய்ய நடுவர்களுக்கு கருவிகள் வழங்கப்படும்.

டிஆர்எஸ்

டிஆர்எஸ்

இனிமேல் டி20 போட்டிகளிலும் டிஆர்எஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 80 ஓவர்களுக்கு பிறகு டிஆர்எஸ் பயன்படுத்த முடியாது. அணிகளுக்கு தலா 2 டிஆர்எஸ் வாய்ப்புகள் வழங்கப்படும்.

ரன்அவுட், ஸ்டெம்பிங்

ரன்அவுட், ஸ்டெம்பிங்

ரன் ஓடி வரும் பேட்ஸ்மேன் கிரீசுக்குள் பேட்டை வைத்துவிட்ட பிறகு அவரது பேட் தரையிலிருந்து மேலே கிளம்பிவிட்டாலோ, அல்லது பேட்ஸ்மேன் பேட்டிலிருந்து தனது தொடர்பை விட்டுவிட நேர்ந்தாலோ அப்போது ஸ்டெம்பில் பந்தை அடித்தால் ரன்அவுட்டாக கருதப்படமாட்டாது. ஒருமுறை உள்ளே பேட்டை வைத்துவிட்டால் அதன்பிறகு ரன்அவுட்டுக்கு வாய்ப்பு இல்லை என்பதே இதன் பொருள். இதுவரையில், பேட்டை உள்ளே வைத்த பிறகும், ஸ்டெம்பில் பந்து படும் தருணத்தில் ஒருவேளை, பேட் அந்தரத்தில் நின்றால் அவுட் கொடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டெம்பிங்கிற்கும் இந்த விதி பொருந்தும்.

பவுண்டரி கேட்சுகள்

பவுண்டரி கேட்சுகள்

பவுண்டரி எல்லைக்கு வெளியே ஓடிவந்து பந்தைபிடித்தபடி மைதானத்திற்குள் சென்றால் அது பவுண்டரியாகவே கருதப்படும். ஃபீல்டர் பந்தை பிடிக்கும்போது எல்லைக்கு உள்ளேயிருந்துதான் ஜம்ப் செய்ய வேண்டும். வெளியே இருந்து உள்ளே ஜம்ப் செய்து (நீண்ட தூரம் ஓடிவரும்போது இப்படி நிகழ்வது உண்டு) கேட்ச் செய்தால் அது அவுட் இல்லை என்பது இதன் பொருளாகும்.

ஹெல்மெட் கேட்ச்

ஹெல்மெட் கேட்ச்

விக்கெட் கீப்பர் அல்லது ஃபீல்டர் அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் பந்து பட்டு கேட்ச் பிடிக்கப்பட்டாலோ அல்லது ஸ்டெம்பிங் செய்யப்பட்டாலோ பேட்ஸ்மேன் அவுட் கொடுக்கப்படுவார். இவ்வாறு விதிமுறைகளை அறிவித்துள்ளது ஐசிசி.

Story first published: Tuesday, September 26, 2017, 15:03 [IST]
Other articles published on Sep 26, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+