For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள்.. புதிய விதிகளை அறிவித்த ஐசிசி.. வரும் 1ஆம் தேதி முதல் அமல்

துபாய் : ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு விதிகளை அதிரடியாக மாற்றியுள்ளது. இதன் மூலம் போட்டி விறுவிறுப்பாக மாறும் என்று ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கங்குலி தலைமையிலான எம்.சி.சி. குழு இந்த மாற்றத்தை செய்துள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த மாற்றம் வர உள்ளது.

கொரோனா காலக் கட்டத்தில் பந்தில் எச்சில் வைத்து தடவ கூடாது. இந்த தடை 2 ஆண்டுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

நேரம்

நேரம்

தற்போது இந்த தடை எப்போதும் தொடரும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இதன் மூலம் பந்து வீச்சாளர்கள், ரிவர்ஸ் ஸ்விங் செய்வது மிகவும் கடினமாக மாறி விடும். இதே போன்று போட்டியை விறுவிறுப்பாக வைத்து கொள்ள புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது. அதன் படி, விக்கெட் விழுந்ததும் அடுத்த பேட்ஸ்மேன்கள் 2 நிமிடத்திற்குள் களத்திற்கு வர வேண்டும். இதே போன்று டி20 போட்டிகளில் 90 விநாடிக்குள் அடுத்த பேட்ஸ்மேன் களத்துக்கு வர வேண்டும்.

புது பேட்ஸ்மேன்

புது பேட்ஸ்மேன்

பேட்ஸ்மேன் கேட்ச்சாகி அவுட்டாகும் போது புது பேட்ஸ்மேன் தான் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும். பழைய முறைப்படி, புது பேட்ஸ்மேன் கேட்சாகி அவுட்டாகும் தருணத்தில், எதிரே இருக்கும் பேட்ஸ்மேன் அவரைதாண்டி ரன் ஓடி இருந்தால், அவரே அடுத்த பந்தை பிடிக்கும் விதி இருந்தது. தற்போது அது ஒழிக்கப்பட்டுள்ளது.

ரன் அவுட் விதி

ரன் அவுட் விதி

பழைய விதிப்படி பந்து இரண்டு, மூன்று பிட்ச்களாகி பேட்டிற்கு வந்தால் அதனை நடுவர் Dead ball என்று அறிவிப்பார். தற்போது அது நோ பால் என்று அறிவிக்கப்படும். மேலும் , பந்து வீசும் முன் பேட்ஸ்மேன் கோட்டை விட்டு நகர்ந்தால், அப்போது எவ்வித எச்சரிக்கையும் இன்றி ரன் அவுட் செய்ய புதிய விதி அனுமதிக்கப்படுகிறது.

ஒருநாள் போட்டியிலும் மாற்றம்

ஒருநாள் போட்டியிலும் மாற்றம்

பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளும் தருணத்தில் ஃபில்டர்கள், வேறு இடத்திற்கு மாற முயற்சித்தால், அது டேட் பால் என அறிவிக்கப்பட்டு, 5 ரன்கள் பெனால்டி விதிக்கப்படும். இதே போன்று நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்றால், பவுண்டரி எல்லையில் ஒரு ஃபில்டர்களை குறைக்கும் விதி இனி அடுத்த ஆண்டு முதல் ஒருநாள் போட்டியிலும் பின்பற்றப்படும்.

Story first published: Tuesday, September 20, 2022, 17:37 [IST]
Other articles published on Sep 20, 2022
English summary
ICC Changes several rules of the game which will effect from oct 1 சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள்.. புதிய விதிகளை அறிவித்த ஐசிசி.. வரும் 1ஆம் தேதி முதல் அமல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+