சவுதாம்டனில்தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ..ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு....காரணம் என்ன?
இங்கிலாந்து: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி எங்கு நடைபெறுகிறது என குழப்பம் இருந்து வந்த நிலையில் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து சவுதாம்டன் ஹாம்சைர் பவுல் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

முதல் தொடர்
கிரிக்கெட் ரசிசர்களிடையே டெஸ்ட் போட்டி குறித்த ஆர்வம் குறைந்து வருவதால அதனை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக 2019ம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதிப் போட்டியானது வரும் ஜூன் 18ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து
இந்த தொடரில் நியூசிலாந்து அணி 420 புள்ளிகளுடன் ஏற்கனவே இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில், நேற்று இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணியும் இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் புள்ளி 520 ஆகும். இந்த தொடரில் இந்திய அணி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 வெற்றிகள், 4 தோல்விகள், ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.

இடமாற்றம்
இந்தியா - நியூசிலாந்து மோதும் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்தது. ஆனால் அங்கு அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக இறுதிப்போட்டிக்கான மைதானத்தை மாற்ற ஐசிசிக்கு வேல்ஸ் கிரிக்கெட் வாரியம், மற்றும் மருத்துவக் குழு ஐசிசிக்கு பரிந்துரைத்தது. இந்நிலையில் லார்ட்ஸுக்கு பதிலாக சவுதாம்டனில் உள்ள ஹாம்சைர் பவுல் மைதானத்திற்கு போட்டி மாற்றப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காரணம்
இதுகுறித்து தெரிவித்துள்ள ஐசிசி, இந்த மைதானத்தை ஒட்டியே நட்சத்திர விடுதி உள்ளதால் வீரர்களை கொரோனா தாக்கம் இன்றி பாதுகாப்பாக தங்க வைக்க முடியும். மேலும் அங்குள்ள சுற்றுப்புற சூழல் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் வீரர்களுக்கு சிறந்த முறையில் இருக்கும். இதன் காரணமாகவே இந்த மைதான தேர்வு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications