Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை: வங்கதேசம் மீது எந்த தடையும், அபராதமும் கிடையாது.. ஐசிசி அறிவிப்பு

ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடையேயான கூட்டத்தில், டி20 உலகக் கோப்பை பங்கேற்பது தொடர்பாக ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டது. பாதுகாப்புச் சிக்கலால் டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் பங்கேற்காததற்கு எந்த அபராதமும் இல்லை என ஐ.சி.சி அறிவித்தது.

ஐ.சி.சி வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்காட்லாந்தைச் சேர்த்தது. இதற்கு ஆதரவாக இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்தது. இந்த சூழலில் போட்டியில் விளையாடுங்கள் என்று வங்கதேச கோரிக்கையை அடுத்து, பாகிஸ்தான் புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராகி வருகிறது.

பி.சி.பி தலைவர் மொஹ்சின் நக்வி, வரும் 24 மணி நேரத்தில் இந்தியா போட்டியில் பங்கேற்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்றார்.டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் பங்கேற்காதது குறித்துப் பேசிய ஐ.சி.சி, "வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒரு மதிப்புமிக்க முழு உறுப்பினர். பெருமைமிக்க வரலாற்றையும், உலக விளையாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கும்" அதற்கு உண்டு என உறுதிப்படுத்தியது.

200 மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் கொண்ட வங்கதேசத்தில் கிரிக்கெட் வளர்ச்சியை ஆதரிப்பதில் ஐ.சி.சி உறுதியாக உள்ளது. "தற்போதைய விவகாரம் தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மீது நிதி, விளையாட்டு அல்லது நிர்வாக ரீதியான எந்த அபராதமும் விதிக்கப்படாது" என ஐ.சி.சி அறிவித்துள்ளது,

2031 உலகக் கோப்பைக்கு முன்னதாக, ஐ.சி.சி நிகழ்வை நடத்த வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. "ஐ.சி.சி, பி.சி.பி மற்றும் BCB, மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து, விளையாட்டின் நலன்களுக்காகத் தொடர்ச்சியான உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் ஆக்கபூர்வமான பங்களிப்பிற்கு உறுதிபூண்டுள்ளன," என அந்த அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சோக் குப்தா, "டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் பங்கேற்காதது வருந்தத்தக்கது. ஆனால் இது, முக்கிய கிரிக்கெட் நாடான வங்கதேசத்தின் மீதான ஐ.சி.சி-யின் நீடித்த அர்ப்பணிப்பை மாற்றாது" என்றார்.அவர் மேலும், "பி.சி.பி உட்பட முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து, அந்நாட்டில் விளையாட்டு வளர்வதையும், வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் எதிர்கால வாய்ப்புகள் வலுப்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதில் எங்கள் கவனம் தொடர்கிறது," எனத் தெரிவித்தார்.

Story first published: Monday, February 9, 2026, 23:36 [IST]
Other articles published on Feb 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+