Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்ஸ்மேன்கள் ஆதிக்கத்துக்கு ஆப்பு.. பேட்டிங் பவர்பிளேயை நீக்க ஐசிசி குழு பரிந்துரை!

மும்பை: ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து பேட்டிங் பவர்பிளே முறையை அகற்ற ஐசிசி கிரிக்கெட் கமிட்டி சிபாரிசு செய்துள்ளது.

ஐசிசி கிரிக்கெட் கமிட்டி முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த குழு, ஒருநாள் கிரிக்கெட் தொடர்பான பல்வேறு அம்சங்களில் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கையை ஐசிசிக்கு அளித்துள்ளது.

பவுலர்களுக்கு சாதகம்

பவுலர்களுக்கு சாதகம்

அந்த அறிக்கையில், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், பவுலர்களுக்கு அதிக சுமையாகவும் இருக்கும் சில விதிமுறைகளை மாற்ற சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் பவுலர்கள் திறமை மழுங்கடிக்கப்படுவதாக எழும் புகார்களை தொடர்ந்து இந்த சிபாரிசு முக்கியத்துவம் பெறுகிறது.

கடைசி பத்து ஓவர்கள்

கடைசி பத்து ஓவர்கள்

அதன்படி, பேட்டிங் பவர் பிளே அகற்றப்பட வேண்டும், 41 முதல் 50 ஓவர்கள் வரையிலான காலகட்டத்தில், தற்போதுள்ள 4 ஃபீல்டர்களுக்கு பதிலாக 5 ஃபீல்டர்களை பவுண்டரி எல்லையில் நிறுத்த அனுமதிக்க வேம்டும், 10 முதல் 30 ஓவர்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் 4 ஃபீல்டர்களை பவுண்டரி எல்லையில் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற சிபாரிசுகள் அதிலுள்ளன.

ஃப்ரீ ஹிட்

ஃப்ரீ ஹிட்

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வீசப்படும் அனைத்து வகையான நோ-பால்களுக்கும் ஃப்ரீ ஹிட் முறை கொண்டு வரவும் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. தற்போதுள்ள விதிமுறைப்படி, காலை கிரீசுக்கு வெளியே வைத்து போடப்படும் நோ பால்களுக்கு மட்டுமே ஃப்ரீ ஹிட் உள்ளது. இடுப்புக்கு மேலே உயரமாக செல்லும் ஃபுல்டாஸ் பந்துக்கு ஃப்ரீ ஹிட் கிடையாது.

பவர்பிளே என்றால் என்ன?

பவர்பிளே என்றால் என்ன?

பவர்பிளேயை ரத்து செய்தால், அது பவுலிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் தற்போது இரு வகை பவர்பிளே ஒருநாள் போட்டிகளில் நடைமுறையில் உள்ளன. முதல் 10 ஓவர்கள் கட்டாய பவர் பிளே. அப்போது 2 ஃபீல்டர்கள் மட்டுமே எல்லைக்கோடு அருகே நிற்க முடியும். மற்றொன்றுதான் பேட்டிங் பவர் பிளே. கடைசி கட்டங்களில், விரும்பிய நேரத்தில் பேட்டிங் செய்யும் அணி அந்த பவர்பிளேயை கேட்டு பெறலாம். இது மொத்தம் 5 ஓவர்கள் கொண்டது. 3 ஃபீல்டர்கள் எல்லைக்கோடு அருகே நிற்க அனுமதியுண்டு.

பேட்ஸ்மேன்களுக்கு ஆப்பு

பேட்ஸ்மேன்களுக்கு ஆப்பு

தற்போது பேட்டிங் செய்யும் அணி, பவர்பிளே ஓவர்களை தங்கள் விருப்பப்படும் நேரத்தில் கேட்டுப்பெற முடிகிறது. அப்போது, 3 ஃபீல்டர்கள் மட்டுமே பவுண்டரி எல்லையில் நிற்க முடியும். மற்ற ஃபீல்டர்கள் உள்வட்டத்திற்குள்தான் இருக்க வேண்டும் என்பதால், நன்கு அடிக்கும் பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்கும் நேரத்தில், அணிகள், பேட்டிங் பவர்பிளேயை தேர்ந்தெடுத்து விளாசுகின்றன. இது பவுலர்களுக்கு பெரும் சுமை என்பதால் ஐசிசி குழு இந்த சிபாரிசை செய்துள்ளது.

Story first published: Tuesday, May 19, 2015, 10:05 [IST]
Other articles published on May 19, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+