Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட.. இதை கவனிக்காமல் போயிட்டோமே.. நேற்று தோனி அடித்த செஞ்சுரியில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?

லண்டன்: நேற்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் தோனி அடித்த செஞ்சுரி முக்கியமான ஒன்றாகும். இந்த செஞ்சுரிக்கு பின் யாரும் நினைத்து பார்க்க முடியாத சென்டிமென்ட் ஒன்று இருக்கிறது.

எரிக்க எரிக்க எழுந்துவரும் பீனிக்ஸ் பறவையாக தோனி தினம், தினம் எழுந்து வந்து கொண்டே இருக்கிறார். உங்களுக்கு வயதாகிவிட்டது, வயதாகிவிட்டது என்று எல்லோரும் கூற கூற, அவர்களுக்கு தன்னுடைய சிக்ஸர் மூலம் பதில் அளித்து வருகிறார்.

கடந்த மூன்று வருடங்களில் தோனியின் மிகச்சிறந்த பார்ம் என்றால் அது இந்த வருடம்தான். இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு சிறப்பாக அமைந்தது. தற்போது உலகக் கோப்பையிலும் கலக்க தொடங்கி விட்டார்.

இந்திய போட்டி

இந்திய போட்டி

நேற்று இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையில் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது பயிற்சி ஆட்டம்

போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக களமிறங்கிய வங்கதேசம் அணி 264 ரன்களுக்கு 49.3 ஓவரில் ஆல் அவுட் ஆகி 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சிறப்பு

சிறப்பு

இந்த போட்டியில் தோனி 78 பந்தில் 118 ரன்கள் எடுத்தார். லோகேஷ் ராகுல் 99 பந்தில் 108 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் குல்தீப், சாஹல் தலா மூன்று விக்கெட் எடுத்தனர். பும்ரா 2 விக்கெட் எடுத்தார். இந்த சிறப்பான ஆட்டம்தான் இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்தது.

தோனி எப்படி

தோனி எப்படி

இந்த போட்டியில் தோனி முதலில் நிதானமாக ஆட தொடங்கி பின் அதிரடி காட்டினார். தோனியின் 78 பந்தில் 118 ரன்கள் எடுத்த செஞ்சுரி மிக முக்கியமான சென்டிமெண்ட் செஞ்சுரி ஆகும். பயிற்சி ஆட்டத்தில் தோனி செஞ்சுரி அடித்தால் கண்டிப்பாக இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற முக்கிய சென்டிமெண்ட் வழக்கத்தில் உள்ளது.

என்ன வரலாறு

என்ன வரலாறு

அதன்படி 2011ல் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் தோனி 64 பந்தில் 108 ரன்கள் எடுத்தார். அதில் இந்தியா உலகக் கோப்பை வென்றது. அதேபோல் 2013 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் தோனி 77 பந்தில் 91 ரன்கள் எடுத்தார். அப்போதும் இந்தியா கோப்பையை வென்றது.

வேறு எப்போது

வேறு எப்போது

இந்த நிலையில் 2019ல் தற்போது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் 78 பந்தில் 113 ரன்களை தோனி எடுத்து இருக்கிறார். இதனால் இந்த உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியா சென்டிமெண்டாக வெல்லும் என்று கூறுகிறார்கள். இந்த தோனியின் ராசி இந்த முறையும் பலிக்கிறதா என்று பார்க்கலாம்!

Story first published: Wednesday, May 29, 2019, 9:51 [IST]
Other articles published on May 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+