Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி எதிரணியின் பீல்டிங்கை மாற்றியது உண்மையா?.. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நடந்தது என்ன?

Recommended Video

WC 2019: Dhoni: வங்கதேசம் அணிக்கு தோனி பீல்டிங்கை மாற்றியது உண்மையா?.. என்ன நடந்தது?- வீடியோ

லண்டன்: நேற்று முதல்நாள் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் தோனி வங்கதேசம் அணியின் பீல்டிங்கை மாற்றியதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பான உண்மையான பின்னணி தற்போது வெளியாகி இருக்கிறது.

உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள் எல்லாம் தயாராகிவிட்டது. இன்று மாலை இங்கிலாந்து அணிக்கும், தென்னாபிரிக்கா அணிக்கும் இடையில் உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ளது.

இந்த போட்டிதான் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியாகும். இங்கிலாந்து வெற்றியுடன் தனது சொந்த மண்ணிலே கணக்கை தொடங்க திட்டமிட்டுள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் தற்போது அனைத்து விதமான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களும் நிறைவு பெற்றுள்ளது. இந்தியா வங்கதேசம் அணிகள் நேற்று முதல்நாள் லண்டனில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது. இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அதிரடியாக வெற்றிபெற்றது.

 தோனி என்ன செய்தார்

தோனி என்ன செய்தார்

இந்த போட்டியில் தோனி பீல்டிங் மாற்றிய சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. தோனி பீல்டிங் மாற்றியது இந்திய அணிக்கு கிடையாது அவர் பபீல்டிங் மாற்றியது, வங்கதேசம் அணிக்கும். இந்த போட்டியில் ஷபீர் ரகுமான் 40வது ஓவர் வீசிக்கொண்டு இருக்கும் போது அந்த சம்பவம் நடைபெற்றது.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

பவுலிங் போட வந்த ரகுமானை நிறுத்திவிட்டு பேட்டிங் செய்த தோனி வங்கதேச பீல்டரை இடம்மாறி நிற்க சொன்னார். வேறு இடத்தில் நில்லுங்கள் என்று மாறி நிற்க சொன்னார். இதனால் ரகுமான் தனது பீல்டரை உடனே மாறும்படி கூறினார். தோனி அந்த பீல்டரை நோக்கி அவர் நிற்பது சரியல்ல என்று கூறி அவரை மாறி நிற்க சொன்னார்.

வீடியோ வைரல்

இந்த சம்பவம் வீடியோவாக வெளியானது. தோனி சூப்பர் பாஸ் என்று பலர் இதுகுறித்து கமெண்ட் செய்தனர். அட தோனி சொன்னபடியே வங்கதேசம் வீரர்கள் கேட்கிறார்களே என்றும் கூட நிறைய பேர் கமெண்ட் செய்து இருந்தனர்.

 என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அதன்படி, தோனி வங்கதேசம் அணியின் பீல்டிங்கை மாற்றி இருக்கிறார். வங்கதேசம் வீரர்கள் அதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் எப்படி நடந்தது, எப்படி வங்கதேசம் வீரர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர் என்று பலர் இதில் கேள்வி எழுப்பி இருந்தனர்.

 என்ன உண்மை

என்ன உண்மை

இதற்கு தற்போது பதில் வந்துள்ளது.

அதன்படி பொதுவாக ஒரு அணி விளையாடும் போது, எதிரணி பீல்டர் முன்னோக்கி மட்டுமே நகர முடியும். பின்னோக்கியோ, வேறு பக்கமோ நகர கூடாது.

அப்படி மீறி நடந்து சென்றால் அது விதி மீறல்.

இதனால்தான் தோனி பேட்டிங் செய்த போது பீல்டர் நகர்ந்து சென்றதை அவர் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

இதனால்தான் நேற்று அவர் கட்டாயமாக பீல்டர் மாற்றும் நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தோனி பீல்டிங்கை மாற்றவில்லை , அவர் தவறை சுட்டிக் காட்டியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

Story first published: Thursday, May 30, 2019, 13:37 [IST]
Other articles published on May 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+