Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை கிரிக்கெட்.. தொடங்கும் முன்பே வென்ற இங்கிலாந்து.. 60 நொடியில் முடிந்த மேட்ச்!

Recommended Video

60 Second Challenge: உலக கோப்பை தொடங்கும் முன்பே வென்ற இங்கிலாந்து அணி- வீடியோ

லண்டன்: நேற்று லண்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் துவக்க விழாவில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.

பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று லண்டனில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான துவக்க விழா நடைபெற்றது. பக்கிங்ஹாம் பேலஸில் உள்ள மாலில் இந்த விழா நடைபெற்றது.

மிகவும் சாதாரணமாக, எளிய முறையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதே சமயம் சுவாரசியமான சில விஷ

எங்கு நடைபெற்றது

எங்கு நடைபெற்றது

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் பேலஸில் இதற்காக தொடக்க விழா நடந்தது. உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் 10 நாட்டு வீரர்களும், கேப்டன்களும் இதில் கலந்து கொண்டனர். அங்கு இருக்கும் தி மால் என்ற இடத்தில் இந்த விழா நடைபெற்றது.

சூப்பர் டிவிஸ்ட்

சூப்பர் டிவிஸ்ட்

இந்த விழாவுடன் சேர்த்து நேற்று லண்டனில் தெருவோர கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். 60 செகண்ட்ஸ் சேலஞ்ச் என்ற பெயரில் இந்த விழா நடைபெற்றது. இது பலரின் கவனத்தை நேற்று ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

என்ன போட்டி

என்ன போட்டி

இந்த போட்டியில் 60 நொடியில் வீரர்கள் அதிக ரன் அடிக்க வேண்டும். 60 நொடியில் இரண்டு வீரர்கள் விளையாடுவார்கள். அவர்கள் இருவரும் முடிந்த அளவு அதிக ரன்கள் எடுக்க வேண்டும். பத்து நாட்டில் இருந்தும் இரண்டு இரண்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

 எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

அதன்படி ஒரு நாட்டில் இருந்து ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் ஒரு பிரபலம் கலந்து கொண்டு விளையாடினார்கள். இந்தியாவில் இருந்து அனில் கும்ப்ளே மற்றும் பாலிவுட் பிரபலம் பாராகான் கலந்து கொண்டார்.

தெருவில் விளையாடினார்கள்

இந்த போட்டியை அவர்கள் தெருவில் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 60 நொடியில் இவர்கள் எத்தனை ரன்கள் எடுக்கிறார்கள் என்பதே போட்டி. ஆனால் இதில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தியாதான் இதில் மிக குறைவான ஸ்கோர் எடுத்தது. இந்தியா வெறும் 14 ரன்கள் தான் எடுத்தது.

இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து வெற்றி

இந்த போட்டியில் இங்கிலாந்து கடைசியில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துதான் அதிக ரன்களை இந்த 60 நொடியில் அடித்தது. கெவின் பீட்டர்சன் விளையாடி இங்கிலாந்து அணி 74 ரன்களை 60 நொடியில் அடித்து சாதனை செய்தது.

ஆஸ்திரேலியா எப்படி

ஆஸ்திரேலியா எப்படி

அதன்பின் இரண்டாம் இடத்தை ஆஸ்திரேலியா அணி பிடித்தது. ஆஸ்திரேலியா அணி , 60 நொடிகளில் சிறப்பாக விளையாடியது. மொத்தம் அந்த அணி 69 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 30, 2019, 12:05 [IST]
Other articles published on May 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+