Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று எப்படி இறங்குவார்கள்.. இந்திய வீரர்கள் எப்படி இருப்பார்கள்.. எகிறும் எதிர்பார்ப்பு.. ஏன்?

Recommended Video

World Cup 2019: IND Vs AFG: India New Jersey | இந்திய வீரர்கள் இன்று எப்படி இறங்குவார்கள்?- வீடியோ

லண்டன்: இந்திய அணி வீரர்கள் இன்று எப்படி களமிறங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையில் பெரிய அளவில் எழுந்து இருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடர் இதுவரை நடந்த உலகக் கோப்பை தொடர்களை விட கொஞ்சம் வித்தியாசமானது. இந்த தொடர் குருப் முறையில் நடக்காமல் அனைத்து அணிகளும் மோதும் ரவுண்ட் ராபின் முறையில் நடக்கிறது.

அதேபோல் இந்த உலகக் கோப்பை தொடரில் கால் பந்தில் இருப்பது போலவே புதிய விதிகள் சில அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் ஒன்று ஜெர்ஸி மாற்றுவது.

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

இந்த உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து நடத்துகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகிறது. இதில் இங்கிலாந்து ஹோம் அணி. அதேபோல் பாகிஸ்தானும் ஹோம் அணி. இந்த இரண்டு அணிகளுக்கும் இதனால் நிறைய சலுகைகள் வழங்கப்படும். அதில் முக்கியமான சலுகை ஜெர்ஸியை தேர்வு செய்வது.

என்ன விதிமுறை

என்ன விதிமுறை

அதன்படி இதனால் இந்த இரண்டு அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் தங்களது ஜெர்சியை பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் தங்கள் ஜெர்ஸியை மாற்ற தேவையில்லை. அதாவது பாகிஸ்தான் பச்சை ஜெர்சியையும், இங்கிலாந்து நீல ஜெர்சியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாற்றம் செய்ய வேண்டும்

மாற்றம் செய்ய வேண்டும்

ஆனால் ஒரே மாதிரி நிறம் கொண்ட இரண்டு அணிகள் ஒரே உடையில் விளையாட முடியாது. உதாரணமாக இந்தியா, இங்கிலாந்து இரண்டும் நீல நிற உடை கொண்ட அணிகள் என்பதால் , இந்தியா வேறு நிறத்தில் அந்த போட்டியில் உடை அணிய வேண்டும். இதனால் உலகக் கோப்பையில் விளையாடும் மற்ற அணிகள் தங்கள் ஜெர்ஸியை சில போட்டிகளுக்கு மட்டும் மாற்ற வேண்டும்.

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் நீல நிற உடை கொண்டது. வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆகியவை பச்சை நிற உடை கொண்டது. இதனால் இந்த அணிகள் மோதும் போது ஒரே நிற ஜெர்ஸிக்கு பதிலாக மாற்று ஜெர்சியை அணிய வேண்டும்.

யார் எல்லாம் மாற்றம்

யார் எல்லாம் மாற்றம்

இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் சில போட்டிகளுக்கு ஜெர்ஸி மாற்ற வேண்டி இருக்கும். இதில் இலங்கை மஞ்சள் நிறத்தையும், ஆப்கானிஸ்தான் சிவப்பு நிறத்தையும், தென் ஆப்பிரிக்கா மஞ்சள் நிறத்தையும், வங்கதேசம் அடர் சிவப்பு நிறத்தையும் தேர்வு செய்துள்ளது. இந்தியா காவி நிறத்தை தேர்வு செய்துள்ளது.

பெரும் எதிர்ப்பு

பெரும் எதிர்ப்பு

இந்திய அணி இன்று காவி நிற உடையை அணிந்து களமிறங்க இருக்கிறது. ஆப்கானிஸ்தான், இந்தியா இரண்டும் நீல நிற உடை கொண்ட அணிகள் என்பதால், இந்தியா காவி உடையை அணிய போகிறது. இந்த புதிய உடையில் இந்திய வீரர்கள் எப்படி இருக்கிறார்கள். இந்த புதிய உடையின் சிறப்பம்சம் எப்படி இருக்கும். நிறங்கள் எப்படி இருக்கும் என்று பலர் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மதியம் மூன்று மணிக்கு வீரர்கள் எப்போது களமிறங்குவார்கள் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

Story first published: Saturday, June 22, 2019, 10:07 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+