Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

99 ரன்னில் எடுத்த ரிஸ்க்.. தோனி அடித்த அந்த ஒரு சிக்ஸ்.. 90 மீட்டருக்கு பறந்த பால்.. வைரல் வீடியோ!

லண்டன்: நேற்று வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் தோனி அடித்த சிக்ஸ் ஒன்று பெரிய வைரலாகி உள்ளது.

கிரிக்கெட் உலகில் தோனிக்கும் கோலிக்கும் இருக்கும் உறவானது மிகவும் வித்தியாசமானது. ரிக்கி பாண்டிங்கிற்கு ஒரு கில்கிறிஸ்ட் போல, கங்குலிக்கு ஒரு சேவாக் போல, தோனி கோலி உறவு நெருக்கமானது.

பொதுவாக தோனி விளையாடுவதை அவரின் ரசிகர்களை விட கோலிதான் அதிகம் விரும்பி பார்ப்பார். கோலி குழந்தையாகவே மாறி பல முறை தோனியின் ஆட்டத்தை ரசித்து இருக்கிறார். பல முறை தோனியின் போட்டியை கோலி ரசிக்கும் வீடியோக்கள் வைரலாகி உள்ளது.

நேற்று அப்படித்தான்

நேற்று அப்படித்தான்

நேற்றும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடைபெற்றது. நேற்று இந்தியா வங்கதேசம் இடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா தோனியின் அதிரடி காரணமாக அபாரமாக வெற்றிபெற்றது. இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது.

மோசமான தோல்வி

இரண்டாவதாக களமிறங்கிய வங்கதேசம் அணி 264 ரன்களுக்கு 49.3 ஓவரில் ஆல் அவுட் ஆகி 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோனி 78 பந்தில் 118 ரன்கள் எடுத்தார். இதில் தோனி மொத்தம் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் அடித்தார்.

கடைசி சிக்ஸ்

கடைசி சிக்ஸ்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தோனி சரியாக 99 ரன்கள் இருக்கும் போது சிங்கிள் ஓட முயற்சி செய்யாமல் அபு ஜெயெத் பந்தில் ஸ்டிரைட் ஹிட் திசையில் 90 மீட்டருக்கு சிக்ஸர் அடித்தார். எந்த டென்ஷனும் இல்லாமல் தோனி அசால்ட்டாக சிக்ஸர் அடித்தார். இதை பார்த்ததும் பல ரசிகர்கள் சந்தோசத்தில் கத்தினர்.

சூப்பர்

சூப்பர்

இந்த பால் 90 மீட்டர் சென்றதும், 99 ரன்னில் ரிஸ்க் எடுத்து தோனி சிக்ஸ் எடுத்ததும் பெரிய வைரலாகி உள்ளது. பொதுவாக ஸ்டிரைட் ஹிட் திசையில் சிக்ஸர் அடிக்க மாட்டார். நேற்று அதையும் சிறப்பாக செய்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 29, 2019, 17:27 [IST]
Other articles published on May 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+