Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவானை கடித்து வைத்த குல்தீப்.. வித்தியாசமாக கைதட்டிய கோலி.. ரசிகர்களை குழப்பிய சம்பவம்!

லண்டன்: நேற்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் சக வீரர் தவானை கடித்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

வங்கதேசம் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் நேற்று பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. நாளை இங்கிலாந்தில் உலகக் கோப்பை போட்டி நடக்க உள்ள நிலையில் இந்த பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.

இதில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. அதன்பின் வங்கதேசம் அணி 264 ரன்களுக்கு 49.3 ஓவரில் ஆல் அவுட் ஆனது. இதனால் அந்த அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 சூப்பர் போட்டி

சூப்பர் போட்டி

இந்த போட்டியில் நேற்று குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். ஐபிஎல் போட்டியில் குல்தீப் யாதவ் பெரிய அளவில் பார்மை இழந்து இருந்தார். இந்த நிலையில் நேற்றைய போட்டி மூலம் அவர் மீண்டும் பார்மிற்கு திரும்பினார்.

 என்ன விக்கெட்

என்ன விக்கெட்

நேற்று அவர் 10 ஓவர் போட்டு வெறும் 47 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் குல்தீப் யாதவ் முக்கியத்துவம் பெறுவார். நேற்று இவர் மஹமதுல்லா, மொசாதீக், முஷ்ஃபகீர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 என்ன செய்தார்

என்ன செய்தார்

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது மஹமதுல்லா விக்கெட் முக்கியமானது. மஹமதுல்லா 9 ரன்கள் எடுத்து இருந்த போது குல்தீப் ஓவரில் போல்ட் ஆனார். இந்த நிலையில் இந்த விக்கெட்டிற்கு பின் நடந்த கொண்டாட்டம் தான் வைரலாகி உள்ளது.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ் விக்கெட் எடுத்த பின் அவரிடம் ஓடி வந்த விராட் கோலி மிக மிக வித்தியாசமாக கைதட்டி கொண்டாடினார். இதை பார்க்கவே மிகவும் காமெடியாக இருந்தது. அதன்பின் ஷிகர் தவான் குல்தீப்பை கட்டிப்பிடித்தார். ஆனால் குல்தீப் ஷிகர் தவானை நெஞ்சில் கடித்து வைத்தார்.

 வைரல் வீடியோ

வைரல் வீடியோ

இந்த இரண்டு சம்பவங்களும் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. ஏன் கோலி குல்தீப்பை கிண்டல் செய்தார். ஏன் அவர் தவானை கடித்து வைத்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Wednesday, May 29, 2019, 17:01 [IST]
Other articles published on May 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+