Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

9.5வது ஓவரில் நிகழ்ந்த மாயம்.. இப்படி ஒரு யார்க்கரா.. ஆச்சர்யப்பட வைத்த பும்ரா பவுலிங்.. வீடியோ!

Recommended Video

ICC WC 2019: Bumrah Best Yorker: ஆச்சர்யப்பட வைத்த பும்ரா பவுலிங்- வீடியோ

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் நேற்று பும்ரா போட்ட பவுலிங் ஒன்று எல்லோரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

தற்போது ஐசிசி ஒருநாள் போட்டிகளில் நம்பர் ஒன் பவுலராக பும்ரா இருக்கிறார். கிரிக்கெட் உலகில் தற்போது விளங்கும் தலை சிறந்த பவுலர் இவர்தான்.

எப்போது யார்க்கர் பந்து போடுவார், எப்போது ஸ்லோ பால் போடுவார் என்று கணிக்க முடியாததே இவரின் சிறப்பு. இந்த நிலையில் நேற்று இவர் போட்ட பவுலிங் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

என்ன போட்டி

என்ன போட்டி

நேற்று வங்கதேசத்திற்கு எதிராக நடந்த பயிற்சி ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய வங்கதேசம் அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா எளிமையாக வெற்றி பெற்றது. ஆனால் வங்கதேசம் தொடக்கத்தில் மிகவும் வலுவாக இருந்தது.

எப்படி வலுவானது

எப்படி வலுவானது

முதலில் களமிறங்கிய லீட்டோன் தாஸ் 73 ரன்கள் எடுத்தார். சவுமியா சர்க்கார் 25 ரன்கள் எடுத்தார். இவர்களின் இணையை உடைக்க இந்திய பவுலர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால் 9வது ஓவரில் பும்ரா பந்தில் சவுமியா அவுட்டானார். ஆனால் அந்த பந்து வைரலாகவில்லை. அதே ஓவரில் அதற்கு அடுத்த பந்திலேயே வங்கதேசம் அணிக்கும் பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது.

என்ன பால்

சரியாக 9.5 ஆவது ஓவரில் பும்ரா யாரும் எதிர்பார்க்காத வகையில் யார்க்கர் பந்து ஒன்றை போட்டார். அவர் பவுலிங் போட்டது உலகில் நம்பர் 1 ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனுக்கு. பால் தரையில் பட்ட வேகத்தில் ஸ்டெம்பில் பாய்ந்தது. பால் பிட்ச்சில் குத்தியதே ஸ்டெம்பிற்கு சில சென்டி மீட்டர்கள் தள்ளிதான்.

அவுட்டானார்

இதனால் ஹசன் பால் எப்படி வந்தது என்று யோசிக்கும் முன்பே அது ஸ்டெம்ப்பை தாண்டி, தோனியின் கைகளுக்கு சென்று இருந்தது. பந்து வீசப்பட்டது 140+கிமீ வேகத்தில். அதற்கு முதல் பால்தான் பும்ரா ஸ்லோ பால் போட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர்

சூப்பர்

இந்த அசுரத்தனமான யார்க்கர் பந்தை பார்த்து தோனியும் ஷாக்கிங் ரியாக்சன் கொடுத்தார். நடந்து முடிந்த பயிற்சி ஆட்டங்களில் இது மிக சிறப்பான பந்தாக பார்க்கப்படுகிறது. இந்த விக்கெட் எப்படி விழுந்தது என்பது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

Story first published: Wednesday, May 29, 2019, 14:50 [IST]
Other articles published on May 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+