Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன டிரெஸ் இது.. ராணி முன்னாடி இப்படியா வருவீங்க.. பாக். கிரிக்கெட் டீம் கேப்டன் உடையால் சர்ச்சை!

Recommended Video

Sarfaraz Ahmed Costume | பாக். கிரிக்கெட் டீம் கேப்டன் உடையால் சர்ச்சை!

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க விழாவில் பாகிஸ்தான் கேப்டன் அணிந்து வந்த உடை பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது .

நேற்று முதல்நாள் மாலை லண்டனில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் துவக்க விழா நடைபெற்றது. இதில் நிறைய சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது.

மிக மிக எளிமையான முறையில் இந்த விழா நடந்தது. மிகவும் சாதாரணமாக, ஆடம்பரமற்ற முறையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

எப்படி

எப்படி

பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முதல்நாள் லண்டனில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான துவக்க விழா நடைபெற்றது. பக்கிங்ஹாம் பேலஸில் உள்ள மாலில் இந்த விழா நடைபெற்றது. சுவாரசியமான சில விஷயங்களும் இந்த விழாவில் நடைபெற்றது. அங்கு இருக்கும் தி மால் என்ற இடத்தில் இந்த விழா நடைபெற்றது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் 10 நாட்டு வீரர்களும், கேப்டன்களும் இதில் கலந்து கொண்டனர். இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய நாடுகள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறது. மொத்தம் பத்து நாடுகள் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது.

ராணி சந்திப்பு

ராணி சந்திப்பு

இந்த விழாவில் இங்கிலாந்து ராணி எலிசபெத் 11 அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களையும் சந்தித்தார். முக்கியமாக இந்திய கேப்டன் கோலியுடன் சில நிமிடங்கள் உரையாடினார். அதன்பின் அனைத்து நாட்டு வீரர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த விழாவிற்கு பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது அணிந்து வந்து உடைதான் சர்ச்சையாகி உள்ளது.

என்ன விமர்சனம்

என்ன விமர்சனம்

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது கோட் சூட் அணிந்து வரவில்லை. அதற்கு பதில் அவர் பாகிஸ்தானியர்கள் பாரம்பரிய உடையான பைஜாமா அணிந்து வந்தார். அந்த பைஜாமா மீது அவர் கோட் அணிந்து இருந்தார். இதுதான் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

எல்லா நாட்டு வீரர்களும் கோட் சூட்டில் வந்திருக்கும் போது, இவர் மட்டும் ஏன் இப்படி உடை அணிந்து வந்திருக்கிறார். இங்கிலாந்து மகாராணிக்கு முன் இவர் மட்டும் ஏன் இப்படி உடை உடுத்தி இருக்கிறார் என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். சிலர் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமதுவை கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

ஆனால் ஆதரவு

ஆனால் ஆதரவு

அதே சமயம் சிலர் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமதுவிற்கு ஆதரவாகவும் பேசி உள்ளனர். பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது செய்ததில் என்ன தவறு இருக்கிறது. அவர், அவர்கள் நாட்டின் பாரம்பரிய உடையை உடுத்தி இருக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.

Story first published: Friday, May 31, 2019, 14:49 [IST]
Other articles published on May 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+