Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சி ஆட்டத்திற்கே இப்படியா.. இனிதான் காளியோட ஆட்டமே இருக்கு.. இந்திய அணியை கொண்டாடும் ரசிகர்கள்!

Recommended Video

World cup 2019 | IND vs BAN | ராகுல், தோனியின் அதிரடியால் வங்கதேசத்துக்கு 360 ரன்கள் இலக்கு

லண்டன்: நேற்று வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

நேற்று இந்தியா வங்கதேசம் இடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்து 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவதாக களமிறங்கிய வங்கதேசம் அணி 264 ரன்களுக்கு 49.3 ஓவரில் ஆல் அவுட் ஆகி தோல்வி அடைந்தது.

இந்தியா தோனியின் அதிரடி காரணமாக அபாரமாக வெற்றிபெற்றது. தோனி 78 பந்தில் 118 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் வெற்றியை நேற்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடினார்கள்.

அட ஆமாம்ல

என்ன பயிற்சி ஆட்டத்திற்கே இத்தனை போஸ்ட்டா இருக்கு... ரெண்டு மாசம் கஷ்டம் தானோ, என்று இவர் கூறியுள்ளார்.

சிக்ஸர்

99ல் இருக்கறப்ப சிக்ஸ்.. தலைவா இந்த பார்மை அப்படியே மெயின்டெய்ன் பண்ணிடுங்க..!

கோலி கோலிதான்

தோனி செஞ்சுரி அடிக்குறப்ப விராட் கோலி முகத்தை பார்க்கிறதே ஒரு சந்தோசம்தான்.. அப்படியே துள்ளி குதிக்கிறார்!

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டத்தில் அடிச்சிட்டு என்ன சீன்.. போன பயிற்சி ஆட்டத்தில் அடிக்கலைன்னு கிண்டல் பண்ணீங்களே.. ஓடிடுங்க..!

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவை நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 10 ஓவர் போட்டு வெறும் 47 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இவர் அதை பாராட்டி குல்தீப் மீண்டும் நன்றாக விளையாட தொடங்கி உள்ளார். இப்படியே அடுத்த 11 மேட்ச் விளையாடினால், கண்டிப்பாக மேன் ஆப் தி சீரியஸ் பட்டம் வெல்வார் என்று கூறியுள்ளார்.

தேவை என்றால் வருவார்

உங்களுக்கு அவர் எப்போது தேவையோ அப்போது கண்டிப்பாக வருவார்.. அவர்தான் வின்டேஜ் தோனி!

கோலி எப்படி

விராட் கோலி தவறான நேரத்தில் அவுட் ஆவதை பார்க்க வருத்தமாக இருக்கிறது... அவர் ஒரு அரை சதமாவது அடித்து இருக்கலாம் என்று இவர் டிவிட் செய்துள்ளார்.

Story first published: Wednesday, May 29, 2019, 10:50 [IST]
Other articles published on May 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+