Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 அணிகளும் தயார்.. நாளை தொடங்குகிறது உலகக் கோப்பை கிரிக்கெட்.. இங்கிலாந்தில் கோலாகல ஏற்பாடு!

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளையில் இருந்து நடக்கிறது. நாளை இங்கிலாந்து நாட்டில் வேல்ஸில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.

1999ல்தான் யூரோ பல நாடுகளின் பணமாக அறிவிக்கப்பட்டது. அதே வருடம்தான் நைஜீரியா ராணுவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது அதே வருடம்தான் ஸ்காட்டிஷ் அரசு தொடங்கப்பட்டது. அதே வருடம் பல விஷயங்கள் நடந்தது.. அதில் ஒன்றுதான் உலகக் கோப்பை போட்டி.. 1999ல்தான் இங்கிலாந்து கடைசியாக உலகக் கோப்பைக்கு போட்டியை நடத்தியது.

இத்தனை வருடங்களில் உலகம் மிக மிக வேகமாக வளர்ந்து இருக்கிறது.உலகம் மட்டுமல்ல கிரிக்கெட் போட்டியிலேயே பிங்க் பந்தில் இருந்து டிஆர்எஸ் முறை வரை பல மாற்றங்கள் வந்துள்ளது. சச்சின் சென்றுவிட்டு விராட் கோலி வந்துவிட்டார்

மாறவில்லை

மாறவில்லை

ஆனால் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் உலகக் கோப்பையில் மட்டும் இன்னும் மாற்றம் எதுவும் வரவில்லை. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த 4 வருடத்திற்கு சாம்பியன் என்ற பெருமையுடன் வலம் வர முடியும். இந்த போட்டி கொஞ்சம் சுவாரசியமானது. ஏனென்றால் இந்த முறை விளையாடும் 10 அணிகளில் 8 அணிகள் மிகவும் வலுவான அணிகள்.

உலகக் கோப்பை போட்டி

உலகக் கோப்பை போட்டி

ஆப்கானிஸ்தான், இலங்கை தவிர மற்ற அணிகள் எல்லாம் மிக மிக வலுவாக இருக்கிறது. முக்கியமாக இந்தியா உலகின் எல்லா அணிகளையும் எதிர்க்கும் அளவிற்கு வலுவான அணியாக இருக்கிறது. 1992ல் இருந்து இப்போதுதான் முதல்முறை இந்த உலகக் கோப்பை போட்டியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்பெல்லாம் குழு குழுவாக பிரித்து போட்டிகள் நடக்கும்.

ரவுண்ட் ராபின் எப்படி

ரவுண்ட் ராபின் எப்படி

இந்த முறை 10 அணிகளும் மற்ற அணிகளை சந்தித்து அதில் வெற்றிபெற வேண்டும் . இதற்கு ரவுண்ட் ராபின் முறை என்று பெயர். இதில் டாப் இடங்களை பிடிக்கும் அணிகள் செமி பைனலுக்கு செல்ல முடியும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.

இல்லை

இல்லை

இதனால் எந்த ஒரு அணியும், எந்த ஒரு அணியையும் எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. இதனால் தகுதியானவர்களுக்கே இந்த கப் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இங்கிலாந்து பிட்சுக்கள் தற்போது பவுலிங் பிட்சில் இருந்து பேட்டிங் பிட்சாக மாற்றப்பட்டுள்ளது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

எப்போதும் இல்லாமல் இந்த முறைதான் இங்கிலாந்து அணி மிக மிக வலுவான அணியாக இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு ஆஸ்திரேலியா அணியும், இந்தியாவும் மிக மிக அதிகமாக டப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்திய அணியில் வலுவான ஓப்பனர் தவான், 3 இரட்டை சதம் அடித்த ஒரே வீரரான ரோஹித் சர்மா, கேப்டன் கிங் கோலி, தல தோனி, ஆல் ரவுண்டர் பாண்டியா என்று ஒரு பெரிய படையே இருக்கிறது .

சூப்பர்

சூப்பர்

இது இல்லாமல் குல்தீப் சாஹல் இணையும், பும்ரா புவனேஷ்வர் இணையும் வலுவான இணையாக இருக்கிறது. இது இல்லாமல் இந்தியா சில மாதங்களுக்கு முன்புதான் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் விளையாடியது. அதே சமயம் ஆஸ்திரேலியா அணியும் வார்னர், ஸ்மித் முழு பார்முடன் திரும்பி வந்ததால் உற்சாகம் அடைந்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இது இல்லாமல் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் எப்போது வேண்டுமானாலும் நமக்கு அதிர்ச்சி அளிக்கலாம். மேற்கு இந்திய தீவுகள் அணியில் 11 பேரும் ஆல் ரவுண்டர்களாக இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் மிகவும் வலுவான அணிகளாக இருக்கிறது. இலங்கை மட்டுமே இதில் கொஞ்சம் வலிமை இல்லாத அணியாக இருக்கிறது.

செம போட்டி

செம போட்டி

இந்த 10 போர் வீரர்களுக்கு இடையில்தான் நாளையில் இருந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. எந்த அணி யாருக்கு அதிர்ச்சி அளிக்கும் என்று போட்டி நடக்க நடக்க தெரியும்.. அடுத்த ஒரு மாதம் கிரிக்கெட் உலகில் கொண்டாட்டமான மாதமாக இருக்க போகிறது!

Story first published: Wednesday, May 29, 2019, 17:46 [IST]
Other articles published on May 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+