கோலியிடம் ஹாய் சொன்ன இங்கிலாந்து ராணி.. மலாலாவின் வருகை.. எளிதாக முடிந்த வேர்ல்ட் கப் விழா!
Recommended Video
லண்டன்: நேற்று லண்டனில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 போட்டிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. உலகமே இந்த தொடரைத்தான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதற்கான தொடக்க விழா மிகச் சிறிய அளவில் நேற்று லண்டனில் நடைபெற்றது.
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் பேலஸில் இதற்காக தொடக்க விழா நடந்தது. உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் 10 நாட்டு வீரர்களும், கேப்டன்களும் இதில் கலந்து கொண்டனர்.

யார் எல்லாம்
மொத்தம் பத்து நாடுகள் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய நாடுகள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறது.

விழா நடைபெற்றது
இதற்கான விழா நேற்று இங்கிலாந்தில் பக்கிங்ஹாம் பேலஸில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் 11 தலைமை தாங்கினார். பாடி மேக்கிங்க்சன், ஷிபானி தண்டகர், கெவின் பீட்டர்சன் ஆகியோர் இந்த விழாவை தொகுத்து வழங்கினார்கள்.

பாடலுடன் தொடங்கியது
ஜான் நியூமேன் என்ற பிரபல பாடகரின் ''பீல் தி லவ்'' என்று பாடலுடன் இந்த விழா தொடங்கியது. இந்த விழா மிக மிக எளிமையாக அமைதியான முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பிரிக்சிட் பிரச்சனை காரணமாக இந்த துவக்க விழா மிக மிக எளிமையான முறையில் சிறிதாக நடத்தப்பட்டது. பெரிய அளவில் இதற்காக ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

உணவு விருந்து
இந்த விழாவிற்கு பின் வீரர்களுக்கு உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைத்து வீரர்களும் கலந்து உரையாடுவதற்கு இந்த விழா பெரிய அளவில் உதவியது. இந்த விழாவிற்கு மிக சிறிய அளவிலேயே மக்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதனால் கூட்டம் மிக குறைவாகவே இருந்தது.

சந்தித்தார்
இந்த விழாவில் இங்கிலாந்து ராணி எலிசபெத் 11 அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களையும் சந்தித்தார். முக்கியமாக இந்திய கேப்டன் கோலியுடன் சில நிமிடங்கள் உரையாடினார். அதன்பின் இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடங்கள் இவர்கள் உரையாடினார்கள். இந்திய கேப்டன் கோலியிடம் தனியாக இவர் உரையாடினார்.

சிலர்
இந்த விழாவில் கிரிக்கெட் துறையை சேராத மலாலா யூசப்சாய் உள்ளிட்ட சில முக்கியமான நபர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இங்கிலாந்திற்கு தென்னாப்பிரிக்காவிற்கும் இன்று மாலை போட்டிகள் நடக்க உள்ளது.


Click it and Unblock the Notifications