நான் நினைச்சது நடந்துடுச்சு.. இது போதும்.. பாசிட்டிவா இருக்கேன்.. கோலி உடைத்த ரகசியம்!
லண்டன்: நேற்று வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் பெற்ற வெற்றி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி முக்கிய ரகசியம் ஒன்றை சொல்லி இருக்கிறார்.
நேற்று வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணி விளையாடிய உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தை தூசி தட்டியது போல தட்டி வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி உலகக் கோப்பை தொடங்கும் முன் பெற்ற இந்த வெற்றி அவர்களுக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய வங்கதேசம் அணி 264 ரன்களுக்கு 49.3 ஓவரில் ஆல் அவுட் ஆகி 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கோலி பேட்டி
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி அளித்துள்ள பேட்டியில், எங்களுக்கு வங்க தேச பவுலர்கள் மிகவும் சவாலாக இருந்தனர். முக்கியமாக அவர்களின் ஸ்பின்னர்கள். முதல் 15 ஓவர்களில் ஸ்பீட் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். வங்கதேச பேட்ஸ்மேன்களும் மிகவும் திறமையாக ஆடினார்கள்.

டாஸ் முக்கியம்
இது பேட்டிங் பிட்ச். இதனால் பெரும்பாலும் டாஸ் வெல்லும் அணி சேஸிங் தேர்வு செய்யவே வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நாங்கள் நேற்று சேஸிங் செய்யாமலேயே சமாளித்தோம். எங்கள் அணியில் எங்களுக்கு சூழல் பந்து வீச்சு பெரிய அளவில் கை கொடுத்தது.

யார் ஆடுவார்
இதுவரை இந்திய அணியில் 4 வது இடத்தில் யார் ஆடுவது என்ற குழப்பம் இருந்து வந்தது. தற்போது அந்த குழப்பம் தீர்ந்துவிட்டது . கே எல் ராகுல் தன்னை அந்த இடத்திற்கு தகுதியானவர் என்று நிரூபித்து இருக்கிறார். அவரால் அந்த இடத்தில் நன்றாக ஸ்கோர் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.

அதிக ரன்கள்
இவர் அதிக ரன்கள் எடுப்பது மட்டுமில்லமல் வேகமாக ரன் எடுக்கும் கலையையும் பெற்று இருக்கிறார். இது போதும் எங்களுக்கு. இதைத்தான் இத்தனை நாட்கள் நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். அது நடந்துவிட்டது, இனி நாங்கள் அணியாக முழுமை பெறுவோம் என்று நம்புகிறேன், என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications