Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை.. பும்ரா, சாஹல், குல்தீப்.. மூவரும் ஆன் தி ஹாட்ரிக்.. அதிசய நிகழ்வு

Recommended Video

WC 2019: Ind Vs Ban: இந்திய வீரர்கள் மூவர் ஹாட்ரிக் தவறவிட்ட அறிய நிகழ்வு- வீடியோ

லண்டன்: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் ஒன்றில் முக்கியமான சம்பவம் ஒன்று நடைபெற்று இருக்கிறது.

நேற்று முதல்நாள் வங்கதேசத்திற்கு எதிராக நடந்த பயிற்சி ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய வங்கதேசம் அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனால் இந்தியா எளிமையாக வெற்றி பெற்றது. ஆனால் வங்கதேசம் தொடக்கத்தில் மிகவும் வலுவாக இருந்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்தியாவிற்கு எதிரான போட்டியில், முதலில் களமிறங்கிய லீட்டோன் தாஸ் 73 ரன்கள் எடுத்தார். சவுமியா சர்க்கார் 25 ரன்கள் எடுத்தார். அப்போது 9வது ஓவரில் பும்ரா பந்தில் சவுமியா அவுட்டானார். அதே ஓவரில் அதற்கு அடுத்த பந்திலேயே வங்கதேசம் அணிக்கும் பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. 9.5 ஆவது ஓவரில் உலகில் நம்பர் 1 ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் அவுட்டானார்.

செம்ம

செம்ம

மிக சிறப்பான யார்க்கர் ஒன்றின் மூலம் ஹசன் அவுட்டானார். இதனால் பும்ராவிற்கு ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த பந்தில் பும்ரா ஹாட்ரிக் எடுக்காமல் தவறவிட்டார். ஆனால் இந்த இரண்டு விக்கெட்டுகள் போட்டியின் போக்கையே மாற்றியது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

அதேபோல் 31வது ஓவரை சாஹல் போட்டார். அந்த ஓவரில் 31.3 பந்தில் வலுவான ஓப்பனிங் வீரரான லித்தோன் தாஸ் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதற்கு அடுத்த பாலே வங்கதேசம் அடுத்த விக்கெட்டை இழந்தது.

அப்படியா?

அப்படியா?

ஆம் அதற்கு அடுத்த 31.4வது பாலே முகமது மிதுன் அவுட்டானார். சாஹல் பாலில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஐவரும் இதனால் ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பு உண்டானது. ஆனால் இந்த வாய்ப்பை நூலிழையில் அவர் தவறவிட்டார்.

குல்தீப் யாதவ் என்ன செய்தார்

குல்தீப் யாதவ் என்ன செய்தார்

அதேபோல் 39வது ஓவரை குல்தீப் யாதவ் போட்டார். இதில் 39.2 வது பாலில் முஷ்பகிர் ரஹீம் அவுட்டானார். அவர் போல்ட்டாகி பெவிலியன் திரும்பினார்.அதற்கு அடுத்த பாலிலேயே மொஸாதிக் உசேன் குல்தீப் பந்தில் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார்.

நழுவியது

நழுவியது

இதனால் குல்தீப்பிற்கு ஹாட்ரிக் எடுக்க வாய்ப்பு கிட்டியது. ஆனால் அடுத்த பந்தில் அவர் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கவில்லை. இவரும் மெல்லிய இடைவெளியில் ஹாட்ரிக் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

இதற்கு முன்

இதற்கு முன்

இதன் மூலம் நேற்று ஒரே போட்டியில் மூன்று வீரர்கள் ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார்கள். ஆனால் அதை கடைசியில் நழுவ விட்டனர். கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை இப்படி ஒரு சம்பவம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 30, 2019, 14:28 [IST]
Other articles published on May 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+