Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இருங்க புது பந்தை கொண்டு வரேன்.. தோனி சிக்ஸ் அடிக்கும் முன்பே புது பாலோடு வந்த அம்பயர்.. சுவாரசியம்

Recommended Video

ICC WC 2019: Ind Vs Ban: Dhoni: தோனி சிக்ஸ் அடிக்கும் முன்பே புது பாலோடு வந்த அம்பயர்- வீடியோ

சென்னை: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் தோனி சிக்ஸர் அடிக்கும் முன்பே அம்பயர் புதிய பந்தை தூக்கிக் கொண்டு வந்தது பெரிய வைரலாகி உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் நிறைய உலவி வருகிறது.

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இங்கிலாந்திற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இன்று மாலை போட்டிகள் நடக்க உள்ளது.

இந்த நிலையில் நேற்று முதல்நாளோடு பயிற்சி ஆட்டங்கள் நடந்து முடிந்தது. இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் நேற்று முதல்நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.

என்ன போட்டி

என்ன போட்டி

இந்த போட்டியில் இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் லோகேஷ் ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் மூன்று பேருக்குமே வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது.

தோனி அதிரடி

தோனி அதிரடி

இந்தியா தோனியின் அதிரடி காரணமாக அபாரமாக வெற்றிபெற்றது. தோனி 78 பந்தில் 118 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் வெற்றியை நேற்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடினார்கள். முக்கியமாக தோனி அடித்த 7 சிக்ஸர்கள் பெரிய கைதட்டலை பெற்றது.

வங்கதேசம் பேட்டிங்

வங்கதேசம் பேட்டிங்

அதன்பின் வங்கதேசம் அணி 264 ரன்களுக்கு 49.3 ஓவரில் ஆல் அவுட் ஆனது. வரிசையாக பேட்டிங் இறங்கிய வீரர்கள் எல்லோரும் பெவிலியன் திரும்பினார்கள். இதனால் அந்த அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில் தோனி ஐம்பது ரன்கள் இருந்த போது முஸாடெக் பந்தில், 36 வது ஓவரில் மிகப்பெரிய சிக்ஸ் ஒன்றை அடித்தார். எப்போதும் போல தனக்கு பேவரைட்டான டீப் மிட் விக்கெட் திசையில் அவர் சிக்ஸர் அடித்தார். அதன்பின் வரிசையாக அதிரடியாக தோனி ஆட தொடங்கினார்.

 எப்படி அடித்தார்

எப்படி அடித்தார்

இதில்தான் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அதன்படி, தோனி சிக்ஸர் அடிக்கும்போதே அம்பயர் ஒருவர் புதிய பந்தை எடுத்துக் கொண்டு மைதானத்திற்குள் வந்துவிட்டார். தோனி அடித்ததை பார்த்ததும் கண்டிப்பாக அந்த பந்து, மைதானத்தை தாண்டி சென்றுவிடும் என்று அவருக்கு தெரிந்துள்ளது. இதனால் வேகமாக அவர் மைதானத்திற்குள் புதிய பந்தோடு நுழைந்தார்.

வைரல்

அம்பயர் புதிய பந்தோடு மைதானத்திற்குள் நுழைந்தது பெரிய வைரலாகி உள்ளது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி உள்ளது. தோனி களத்தில் நின்றால் அம்பயர் கூட உஷாராகத்தான் இருக்கிறார் என்று இவர் போஸ்ட் செய்து இருக்கிறார். நேற்று முதல்நாள் நடந்த போட்டியில் தோனி 8 பவுண்டரி, 7 சிக்ஸர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 30, 2019, 10:39 [IST]
Other articles published on May 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+