Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பையில் கத்துக்குட்டி அணியின் விக்கெட் கீப்பர் தான் நம்பர் 1.. கே எல் ராகுல் எந்த இடம்?

லக்னோ : 2023 உலகக்கோப்பை தொடரில் சிறந்த விக்கெட் கீப்பர் இவரா? என ஆச்சரியப்படும் வகையில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பராக முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் நெதர்லாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஸ்காட் எட்வர்ட்ஸ்.

ஸ்காட் 7 போட்டிகளில் 12 கேட்ச், 2 ஸ்டம்பிங் செய்து 14 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் 9 விக்கெட் வீழ்ச்சியுடன் நான்காம் இடத்தில் தான் இருக்கிறார். இதுவே சராசரியான இடம்தான்.

ICC Cricket World Cup 2023 Best Wicket Keeper 2023 : Netherlands keeper Scott Edwards tops, KL Rahul stays fourth position

சிறந்த விக்கெட் கீப்பர் பட்டியல் என்பது சிறந்த பந்துவீச்சாளர்கள், சிறந்த பெட்ச்மேன்கள் பட்டியல் போல பெரிது அல்ல. பத்து அணிகளுக்கு சேர்த்து மொத்தமே 13 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அதில் சில அணிகள் சில போட்டிகளில் விக்கெட் கீப்பரை மாற்றியதால் கூடுதலாக மூன்று வீரர்கள் பட்டியலில் உள்ளனர். இல்லையெனில், மொத்தமே பத்து விக்கெட் கீப்பர்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்று இருப்பார்கள்.

அந்த வகையில் பார்த்தால் 7 உலகக்கோப்பை போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக ஆடி இருக்கும் கே எல் ராகுல் 8 கேட்ச், 1 ஸ்டம்பிங் செய்து நான்காம் இடத்தில் இருப்பது சராசரியான செயல்பாடு தான். எனினும், ஒரு அணியின் பந்துவீச்சாளர்கள் எந்த முறையில் விக்கெட் வீழ்த்த திட்டமிடுகிறார்கள் என்பதை பொறுத்தே விக்கெட் கீப்பருக்கு விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைக்கும்.

அந்த வகையில், நெதர்லாந்து அணியின் ஸ்காட் எட்வர்ட்ஸ் தன் அணியின் பந்துவீச்சாளர்கள் உதவியுடன் அதிக கேட்ச்களை பிடித்து, இரண்டு ஸ்டம்பிங் செய்து முதல் இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் க்விண்டன் டி காக் 7 போட்டிகளில் 11 கேட்ச், 1 ஸ்டம்பிங் செய்து 12 விக்கெட் வீழ்ச்சியுடன் இருக்கிறார்.

மூன்றவது இடத்தில், பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், ராகுலுக்கு இணையாக 9 கேட்ச் பிடித்து, 9 விக்கெட் வீழ்ச்சியுடன் இருக்கிறார். எனினும், ராகுல் அதிகபட்சமாக ஒரே போட்டியில் 2 விக்கெட் வீழ்ச்சி மட்டுமே செய்துள்ளார். ஆனால், ரிஸ்வான் ஒரு போட்டியில் மூன்று கேட்ச் பிடித்து இருப்பதால் அந்த வகையில் ராகுலை விட முந்தி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 8 விக்கெட் வீழ்ச்சி, இலங்கையின் குசால் மென்டிஸ் 7 விக்கெட் வீழ்ச்சி செய்து ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளனர்.

Story first published: Friday, November 3, 2023, 21:52 [IST]
Other articles published on Nov 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+