ஐசிசி விருதுகள்.. 10 ஆண்டுகளில் பெஸ்ட் ஆண்கள் ஒருநாள் அணி இதுதான்.. இதுக்கும் கேப்டன் தோனிதான்!
டெல்லி: கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த ஆண்கள் ஒருநாள் அணி ஐசிசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கும் தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி விருதுகள் 2020 அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்றும் நாளையும் இதற்கான விருதுகள் அறிவிக்கப்படும். மக்களின் வாக்கெடுப்பை அடிப்படையாக வைத்து இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது
கடந்த 10 வருடங்களில் கிரிக்கெட் உலகில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களில் கிரிக்கெட் உலகில் சிறந்து விளங்கிய வீரர்களை வைத்து ஒருநாள் , டி 20 மற்றும் டெஸ்ட் பிரிவிற்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

எப்படி
கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த ஆண்கள் ஒருநாள் அணிக்கும் தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டி 20 அணிக்கும் இவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் அணிக்கும் தோனிதான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்பதால் ஐசிசி இவருக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.

தோனி திறமை
தோனியின் திறமை மற்றும் மக்கள் வாக்களித்த எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த ஆண்கள் ஒருநாள் அணியில் மூன்று இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா, கோலி, தோனி ஆகிய மூன்று வீரர்கள் ஒருநாள் அணியில் தேர்வு. ரோஹித் சர்மா ஓப்பனிங் வீரராகவும், கோலி ஒன் டவுன் வீரராகவும் தேர்வாகி உள்ளார். இவர்கள் போக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், மிட்சல் ஸ்டார்க், தென்னாப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ், இம்ரான் தாஹிர்,

இலங்கை
இலங்கையின் மலிங்கா, நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட், வங்கதேசத்தின் ஷாகிப் அல்ஹசன், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் இந்த சிறந்த ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications