Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி விருதுகள்.. கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த டி 20 அணி.. தோனிதான் கேப்டன்.. அதிரடி விருது அறிவிப்பு!

டெல்லி: கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த வீரர்களை கொண்ட ஐசிசி டி 20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 அணிக்கு தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி விருதுகள் 2020 அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களில் கிரிக்கெட் உலகில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மக்களின் வாக்கெடுப்பை அடிப்படையாக வைத்து இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சில விருதுகள் நேரடியாக ஐசிசி தேர்வுக்குழு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 எப்படி

எப்படி

கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த வீரர்களை கொண்ட ஐசிசி டி 20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 அணிக்கு தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டில் டி 20 கிரிக்கெட் போட்டியில் சாதனை செய்தவர்களை தேர்வு செய்து இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது.

யார்

யார்

டி 20 கிரிக்கெட் உலகில் சிறப்பாக செயல்பட்டதற்காக தோனி இந்த அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, கோலி, பும்ரா, தோனி இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் இந்திய வீரர்கள்தான் அதிகம் உள்ளனர்.

வேறு யார்

வேறு யார்

அதேபோல் இந்த அணியில் மேற்கு இந்திய தீவுகள் வீரர் கெயில், பொல்லார்ட், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல், தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ், இலங்கை வீரர் மலிங்கா, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் ஆகியோர் ஐசிசிக்கான சிறந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்

இல்லை

இல்லை

கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த வீரர்களை கொண்ட ஐசிசி டி 20 அணியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணி வீரர்கள் இடம்பெறவில்லை. இதில் பாகிஸ்தான் வீரர்களும் இடம்பெறவில்லை.

Story first published: Sunday, December 27, 2020, 23:10 [IST]
Other articles published on Dec 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+