ஐசிசி விருதுகள்.. அனைத்து பார்மெட்டிலும் கோலோச்சும் இந்திய வீரர்கள்.. யாருக்கு என்ன விருது.. லிஸ்ட்!
சிட்னி: கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் அணி விருதுகளை ஐசிசி அறிவித்து வருகிறது. இதில் இந்தியர்கள்தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
கடந்த 10 வருடத்தில் கிரிக்கெட் உலகில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு ஐசிசி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா வருடமும் இறுதியில் அறிவிக்கப்படும் ஐசிசி விருதுகள் இந்த முறை 10 ஆண்டு சிறப்பு விருதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களில் கிரிக்கெட் உலகில் சிறந்து விளங்கிய வீரர்களை வைத்து ஒருநாள், டி 20, டெஸ்ட் அணிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

எப்படி
இந்த ஒருநாள், டெஸ்ட், டி 20 அணிகளில் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். டெஸ்ட் அணிக்கு கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டி 20 அணிக்கு கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வீரர்
மூன்று அணியிலும் இடம்பெற்ற ஒரே வீரர் என்ற பெயரை கோலி பெற்றுள்ளார். ஒருநாள், டி 20 அணியில் அதிக அளவில் இந்திய வீரர்களே இடம்பிடித்துள்ளனர். டெஸ்ட் அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பிடித்துள்ளார் .

டி 20 அணி
கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த வீரர்களை கொண்ட ஐசிசி டி 20 அணி தோனி (கேப்டன்) ரோஹித் சர்மா, கோலி, பும்ரா, கெயில், ஆரோன் பின்ச், ஏபி டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், பொல்லார்ட், மலிங்கா, ரஷீத் கான் ஆகியோர் ஐசிசிக்கான சிறந்த டி 20 அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் அணி
கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த ஆண்கள் ஒருநாள் அணி தோனி (கேப்டன்) ரோஹித் சர்மா, கோலி, டேவிட் வார்னர், ஏபிடி வில்லியர்ஸ், ஷாகிப் அல்ஹசன், பென் ஸ்டோக்ஸ் மிட்சல் ஸ்டார்க், மலிங்கா, டிரெண்ட் போல்ட், இம்ரான் தாஹிர் ஆகியோர் ஐசிசிக்கான சிறந்த ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் அணி
கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த ஆண்கள் டெஸ்ட் அணி: கோலி (கேப்டன்) அஸ்வின், டேவிட் வார்னர், அலைஸ்டர் குக், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், குமார் சங்ககாரா, டேல் ஸ்டேயின், ஸ்டுவர்ட் போர்ட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் ஐசிசிக்கான சிறந்த டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications