For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி விருதுகள்.. 10 ஆண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணி.. தமிழக வீரருக்கு இடம்.. கோலிதான் கேப்டன்!

சிட்னி: கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த ஆண்கள் டெஸ்ட் அணி ஐசிசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் அணியின் கேப்டனாக கோலி அறிவிக்கப்பட்டுள்ளார்.

எல்லா வருடமும் இறுதியில் அறிவிக்கப்படும் ஐசிசி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம்.. மொத்தமாக கடந்த 10 வருடத்தில் கிரிக்கெட் உலகில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.

கடந்த 10 வருடங்களில் கிரிக்கெட் உலகில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

எப்படி

எப்படி

மக்களின் வாக்கெடுப்பை அடிப்படையாக வைத்து இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த ஆண்கள் டெஸ்ட் அணி ஐசிசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் அணியின் கேப்டனாக கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த ஆண்கள் டெஸ்ட் அணியில் 2 இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வீரர்

தமிழக வீரர்

தமிழக வீரர் அஸ்வின் இந்த டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சிறப்பாக ஆடி வருகிறார். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய மிக முக்கியமான வீரராக அஸ்வின் உருவெடுத்துள்ளார்.

யார் எல்லாம்

யார் எல்லாம்

ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், அலைஸ்டர் குக், ஸ்டுவர்ட் போர்ட், ஜேம்ஸ் ஆண்டர்சன், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், இலங்கையின் குமார் சங்ககாரா, தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டேயின் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐசிசி

ஐசிசி

இதன் மூலம் ஐசிசி அறிவித்த கடந்த 10 ஆண்டுக்கான மூன்று அணியிலும் இந்தியர்களே கேப்டனாக உள்ளனர். டெஸ்ட் அணிக்கு கோலியும், ஒருநாள் மற்றும் டி 20அணிக்கு தோனியும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் மற்றும் டி 20 அணியில் கேப்டனாக இருந்த தோனிக்கு டெஸ்ட் அணியில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 27, 2020, 23:11 [IST]
Other articles published on Dec 27, 2020
English summary
ICC Decade Awards: Kohli selected as the captain for best decade test team, Ashwin also named in the team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+