For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இத்தனை சர்வதேச போட்டிகளா? பிப்ரவரி மாதம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜாலி தான்.. அட்டவணை இதோ

மும்பை : 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பாக தான் இருந்தார்கள். காரணம் இந்திய அளவிலும் சரி சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, பெரிய அணிகள் பங்கேற்கும் தொடர் எதுவுமே நடைபெறவில்லையே என்று ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருந்தார்கள். இந்த நிலையில் உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் நீங்கள் என்றால் பிப்ரவரி மாதம் முதல் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்.

ஏனென்றால் இந்தியா உள்ளிட்ட பல அணிகள் பிப்ரவரி மாதத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

ICC February month schedule is fulled with big international matches

பிப்ரவரி இரண்டாம் தேதி ஆன நாளை இந்தியா, இங்கிலாந்து மோதும் இரண்டாவது டெஸ்ட்டும், பிப்ரவரி 15ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட்டும், பிப்ரவரி 23ஆம் தேதி நான்காவது டெஸ்ட் நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணி அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

பிப்ரவரி 4ஆம் தேதி முதல் டெஸ்ட், பிப்ரவரி 13ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட்டும் நடைபெறுகிறது. இதேபோன்று ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்த மாதம் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி இரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. ஒரு நாள் தொடர் பிப்ரவரி 9, 11 மற்றும் 11ம் தேதியும் டி20 தொடர் 17 19 மற்றும் 21ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ள நிலையில் நாளை முதல் வெள்ளை நிற கிரிக்கெட் பந்து தொடர் நடைபெறுகிறது. மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடுகிறது. பிப்ரவரி 2, 4 மற்றும் 6ஆம் தேதி ஒரு நாள் தொடரும் 9 ,11, 13 ஆம் தேதி டி20 போட்டிகளும் நடைபெறுகிறது. இது இந்திய ரசிகர்கள் பார்க்க ஏதுவாக காலை 9 மணிக்கு ஒரு நாள் போட்டியும் மதியம் 1.30 மணிக்கு ல் டி20 தொடரும் நடைபெறும்.

இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. பிப்ரவரி 21ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியும், 23 25 ஆம் தேதி எஞ்சிய இரண்டு ஒருநாள் போட்டிகளும் நடைபெறும். பிப்ரவரி 29ஆம் தேதி ஆஸி,நியூசி மோதும் முதல் டெஸ்ட் தொடங்குகிறது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் ஒரு டெஸ்ட் போட்டியில் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறுகிறது. இதேபோன்று மகளிர் ஐபிஎல் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் பாகிஸ்தான் ப்பர் லீக் தொடர் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்குகிறது,.அதுமட்டுமல்லாமல் அண்டர் 19 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் சிக்ஸ் மற்றும் அரை இறுதி, இறுதி போட்டிகள், பிப்ரவரி மாதத்தில் தான் நடைபெறுகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் மாதமாக இது அமைந்துள்ளது.

Story first published: Thursday, February 1, 2024, 22:56 [IST]
Other articles published on Feb 1, 2024
English summary
ICC February month schedule is fulled with big international matches இத்தனை சர்வதேச போட்டிகளா? பிப்ரவரி மாதம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜாலி தான்.. அட்டவணை இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+