ஐசிசி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது.. ஜெய்ஸ்வால் உள்ளிட்ட 3 பேர் போட்டி
மும்பை : ஐசிசி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.
2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதத்திற்கான விருதை வெஸ்ட் இண்டீஸ் வீரர் சம்மர் ஜோசப் கைப்பற்றினார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான விருதுக்காக போட்டியிடும் மூன்று வீரர்களை ஐசிசி அறிவித்திருக்கிறது. இந்தப் பட்டியலில் மூன்று வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்தியாவை சேர்ந்த தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 560 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு இரட்டை சதம் அடங்கும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாக ஜெய்ஸ்வால் இருந்தார். இதனால் இம்முறை இவருக்கு தான் இந்த விருந்து கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதைப் போன்று இந்த பட்டியலில் இலங்கை அணியின் பத்தும் நிஷாங்கா இருக்கிறார். அவரும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதனால் இசான் கிஷன் நல்ல ஒரு போட்டியை ஜெய்ஸ்வாலுக்கு தருவார். இதேபோன்று இந்த பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருக்கும் வீரர் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானவர்.
நியூசிலாந்தை சேர்ந்த கேன் வில்லியம்சன். பிப்ரவரி மாதம் மட்டும் 430 ரன்கள் அடித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேன் வில்லியம்சன் மூன்று சதம் அடித்திருக்கிறார். இதில் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து கேன் வில்லியம்சனும் அசத்தினார். இதனால் இந்த மூன்று வீரர்களுமே இந்த மாதம் சிறப்பாக விளையாடிருப்பதால் யாருக்கு இந்த விருது கிடைக்கும் என்பதில் ரசிகரும் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications