Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 போட்டிகள் நீளமாக இருக்கிறதா? இதோ உங்களுக்காக டி10 போட்டிகள் வருகின்றன!

வாஷிங்டன் : டி10 லீக் எனப்படும் பத்து ஓவர் போட்டிகள் கொண்ட தொடருக்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே ஒரு சீசன் நடத்தப்பட இந்த போட்டிகள், தற்போது இரண்டாவது முறை நடத்தப்படவுள்ளது. ஷார்ஜாவில் இந்த ஆண்டு நவம்பர் 23 முதல் இந்த தொடர் தொடங்கவுள்ளது.

டி20 போட்டிகளின் வரவால் டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான வரவேற்பு குறைந்து வருவதாக ஒருபுறம் கூறப்பட்டு வரும் நிலையில், இருபது ஓவர்களையும் பாதியாக்கி 10 ஓவர்கள் என போட்டிகள் நடத்துவது எங்கே போய் முடியுமோ என கேட்கும்படி உள்ளது.

icc gave approval to the t10 tournament


ஐக்கிய அரபு நாட்டின் கிரிக்கெட் அமைப்பு நடத்தும் இந்த டி10 தொடர் ஐபிஎல் பாணியிலேயே நடத்தப்படுகிறது. இங்கேயும் எட்டு அணிகள் மோதுகின்றன. பல்வேறு நாடுகள் அல்லது ஒரு நாட்டினுடைய மாநிலத்தின் பிரதிநிதிகளாக மொத்தம் எட்டு அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடு உள்ளிட்ட நாடுகளின் சார்பாக அணிகள் உள்ளன. ஐபிஎல் போலவே, பெயர்கள் மட்டுமே நாடு அல்லது மாநிலம் சார்ந்து இருக்கிறது. மற்றபடி, பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களே அதிகம் பங்கேற்கின்றனர். உள்ளூர் வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இதில் மற்றுமொரு சுவாரஸ்யம், முதல் சீசன் வெறும் நான்கு நாள் மட்டுமே நடைபெற்றது. தற்போது இரண்டாவது சீசன் பத்து நாள் வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் வீரர்கள் தேர்வும், நவம்பர் மாதம் 23 முதல் போட்டிகளும் தொடங்க உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற சீசனில் ஐசிசி ஒப்புதலோடு இந்த டி10 போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் இயான் மார்கன் தலைமையில் ஆடிய கேரளா கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. முதல் சீசனை ஒரு பரிசோதனை முயற்சியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தற்போது இரண்டாவது சீசனையும் இந்த தொடர் எட்டியுள்ளதால் அனேகமாக, இனி வருடாவருடம் இந்த பத்து ஓவர் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியே போனா, ஐந்து ஓவர், ஒரு ஓவர் போட்டி எல்லாம் கூட வரும் போலேயே!! நல்லவேளை புக் கிரிக்கெட்டுக்கு இன்னும் டோர்னமென்ட் ஆரம்பிக்கலை..







Story first published: Friday, August 10, 2018, 14:56 [IST]
Other articles published on Aug 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+