மும்பை : 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கிறது.
ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய வீரர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஐசிசி ஒரு புதிய கெடுவை விதித்துள்ளது. அதன்படி 10 அணிகளும் தங்களுடைய வீரர்களை வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அணிகளும் இறுதி கட்ட பணியில் ஈடுபட உள்ளது.

செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் எதிரான மூன்று ஒரு நாள் போட்டி ஆசிய கோப்பை போட்டியில் மட்டும்தான் நடைபெறுகிறது. அதற்குள் இந்திய அணி தங்களது 15 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். முதலில் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் மும்பையில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் தற்போது வெறும் ஐம்பது நாட்கள் மட்டும் தான் இருப்பதால் அஜித் அகார்கர் நேரடியாக வெஸ்ட் இண்டிஸ்க்கு செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம்பெற போகும் வீரர்கள் தான். உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் எந்த வீரர்களை தேர்வு செய்வது? என்ன பிளான் வைத்திருக்கிறீர்கள்?
உலகக்கோப்பையை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து எல்லாம் விவாதிக்க தற்போது அஜித் அகாக்கர் நேரடியாக மேற்கிந்திய தீவுகளுக்கு செல்ல இருக்கிறார். அங்கு வீரர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு பின்னர் அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபடும் என தெரிகிறது. தற்போது ஐசிசி செப்டம்பர் ஐந்து என கெடு விதித்துள்ளதால் இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற கிரிக்கெட் வாரியங்களும் அதற்கான இறுதி கட்டப் பணிகளை தொடங்கி இருக்கின்றன.