For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் , பாபர் அசாம்க்கு தடை விதிக்க வாய்ப்பு.. ஐசிசி விதியால் காத்திருக்கும் ஆபத்து.. முழு விவரம்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் மோதிய ஆட்டம் செம ஹிட்டாகியுள்ளது. இதனை ஹாட்ஸ்டாரில் வரலாற்றில் முதல் முறையக சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

Recommended Video

Asia Cup-ல் Pakistan தோல்வி! India-வின் வெற்றிக்கான Reasons என்ன | Aanee's Appeal

இந்த நிலையில், ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் வெற்றி பெற்றால் மீண்டும் இவ்விரு அணிகளும் வரும் ஞாயிற்றுகிழமை மோதும்.

இதனால், கிரிக்கெட் ரசிகர்களும் ரவுண்டு 2விற்கு தயாராகி உள்ளனர். ஆனால், இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது..

கடும் வெப்பம்

கடும் வெப்பம்

ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறும் துபாயில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் இரவு நேரமாகியும் வெப்பம் மற்றும் அனல் காற்று தணிவதில்லை. இதனால், மாலை நேரத்தில் விளையாடும் லீரர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது, போட்டியில் விளையாடும் போது, வீரர்களுக்கு அடிக்கடி தசைப் பிடிப்பு ஏற்படுகிறது.

ஃபில்டிங் விதி

ஃபில்டிங் விதி

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கூட பல்வேறு பாகிஸ்தான் வீரர்களுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டி அடிக்கடி தடைப்பட்டது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் ஓவர்கள் வீச பாகிஸ்தான் அணி அதிக நேரம் எடுத்து கொண்டது. இதன் காரணமாக ஐசிசி விதிப்படி, பவுண்டரி லைனில் நிற்கும் ஒரு வீரர் குறைக்கப்பட்டார்.

ஐசிசி அதிரடி

ஐசிசி அதிரடி

இதனால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாகி இருந்தது. இந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக ஓவர்கள் வீச எடுத்து கொண்டதால் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு 40 சதவீதம் ஊதியத்திலிருந்து அபாராதமாக ஐசிசி விதித்துள்ளது. இதற்கு விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தடை விதிக்கபட வாய்ப்பு

தடை விதிக்கபட வாய்ப்பு

சுற்றுச்சுழல் காரணமாக வீரர்களுக்கு ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக ஓவர்கள் வீச தாமதமானது. இதனை ஐசிசி கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள விளையாட்டு ஆர்வலர்கள், இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறவும் வாய்ப்பு இருப்பதால், ஐசிசியின் விதியின் படி கேப்டன்களுக்கு தடை விதிக்கும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, August 31, 2022, 21:12 [IST]
Other articles published on Aug 31, 2022
English summary
ICC Imposed heavy fine for India and Pakistan team in asia cup ரோகித் , பாபர் அசாம்க்கு தடை விதிக்க வாய்ப்பு.. ஐசிசி விதியால் காத்திருக்கும் ஆபத்து.. முழு விவரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+